உதயநிதியின் மாபெரும் பாய்ச்சல்.. 2 வது இளைஞரணி மாநில மாநாடு! மாற்றப்பட்ட தேதி அறிவிப்பு - எப்போது?
சென்னை: டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இந்த திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு கனமழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது இளைஞரணியின் முதல் மாநில மாநாடு நெல்லை நடைபெற்றது. இந்த நிலையில் இளைஞரணி 2 வது மாநில மாநாடை சேலத்தில் கடந்த 2023 டிசம்பர் 17 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட உள்ளது. ஒருநாள் இது ஏற்பாடு செய்யப்பட்ட இது, திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை கொட்டித் தீர்த்ததால் 4 மாவட்டங்கள் வெள்ளக் காடாகின.

அந்த துயரம் துடைக்கப்படுவதற்குள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட தேதியை வெளியிட்டு உள்ளது அக்கட்சித் தலைமை.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது, “மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வருகிற 21.01.2024 ஞாற்றுக்கிழமை அன்று சேலத்தில் நடைபெறும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த மாநாடு பற்றி தெரிவிக்கையில், “தேர்தல் களத்திற்கான பயிற்சிக் களமாக அமைய இருக்கும் இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டின் வெற்றி, அதனைப் பறைசாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் தம்பி உதயநிதி அழைக்கிறார்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என்.நேரு கடந்த மாதம் இதுகுறித்து தெரிவிக்கையில், “இளைஞரணி மாநாடு திமுகவின் வரலாற்றில் மட்டுமின்றி தமிழ்நாடு வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய மாநாடாக அமைய உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு சேலம் மாநாடு அடித்தளம் அமைக்கும். கிட்டத்தட்ட 5 லட்சம் திமுக தொண்டர்கள், இளைஞரணி நிர்வாகிகள் வர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து இருக்கிறோம். இது அவர்களுக்கு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டும் மாநாடாக அமையப் போகிறது.” என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications