மதுரையில் 3.18 ஏக்கர் நில பத்திரப்பதிவு.. ஆமா, தாய் பத்திரம்? அரசு ஊழியர்களால் ஆடிப்போன திருமங்கலம்
சென்னை: அரசு அதிகாரிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்கி கைதாவது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது... கைது நடவடிக்கைகள் அதிகமானாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதோ மதுரையில் 2 பேர் சிக்கியிருக்கிறார்கள்.
தமிழகத்தின் அரசு துறைகளில் லஞ்ச லாவண்யங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் அப்பட்டமாக அசிங்கப்பட்டு, கைதாகி வருகிறார்கள். இதில், பெண் அதிகாரிகளும் கைதாவது கவலையை தந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில், சமீபகாலமாகவே வருவாய்த்துறையிலும், பதிவுத்துறையிலும், லஞ்சம் வாங்குவோர் சிக்கி, கைது நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன. பட்டா மாறுதல் கோரியும், நிலத்தை அளக்க வேண்டியும், விதவைத் தொகை வழங்க கோரியும், வருவாய் சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்காகவும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், தங்களையே நம்பி வரும் மக்களிடம், லஞ்ச பணம் கேட்பதால், அதிர்ச்சிக்குள்ளாகிவிடுகிறார்கள்.
சார் பதிவாளர்கள் - மூலப்பத்திரம்
இதனால், விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார் தந்துவிடுகிறார்கள். இந்த புகாரின்பேரில் கையும் களவுமாக அதிகாரிகளும், ஊழியர்களும் பொதுவெளியில் கைதானாலும், மீண்டும் லஞ்சம் பெறும் அதிகாரிகள் முளைத்து கொண்டேயிருக்கிறார்கள். இதோ மதுரையில் பத்திரப்பதிவு செய்ய போனவருக்கு நேர்ந்த நிலைமையை பாருங்கள்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவர் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் ஆவார்.. சமீபத்தில் இவர், கிழவநேரியில் 3.18 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார்.. ஆனந்தராஜூக்கு, இந்த 3.18 ஏக்கர் நிலத்தை செந்தில்குமார் என்பவருக்கு விற்றுள்ளார்..

திருமங்கலம் பத்திரப்பதிவு
இந்த நிலத்தை பதிவு செய்ய திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகம் சார் பதிவாளர் (பொறுப்பு) பாண்டியராஜனை அணுகினார். ஆனால், நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போனதாக தேனி தென்கரை ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை செய்யாமல், நிலப்பதிவு செய்வதற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டாராம் பாண்டியராஜன்.. இந்த லஞ்ச பணத்தை வழங்க செந்தில்குமாருக்கு விருப்பமில்லை..
பதிவாளர், பத்திர எழுத்தர்
ஆனால், "ரூ.1 லட்சம் வழங்கினால் மட்டுமே பதிவு செய்யலாம்" என பதிவாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பேரம் பேசப்பட்டு, ரூ.70 ஆயிரமாக குறைத்த பதிவாளர், இந்த தொகையை பத்திர எழுத்தர் பாலமணிகண்டனின் வங்கி கணக்கில் செலுத்துமாறும் சொன்னாராம்.. அதன்படியே, செந்தில்குமார் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும் புகார் அளித்தார்..
இதையடுத்து, பாலமணிகண்டனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அவரது வாக்குமூலத்தின்படி பாண்டியராஜனிடமும் விசாரித்தனர். இறுதியில் சார் பதிவாளர், எழுத்தர் என இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications