3.25L சம்பளம்.. ஆனால் பேங்க்கில் ஒரு ரூபாய் கூட இல்லாத அளவுக்கு லோன், கிரெடிட் கார்டு என சிக்கல்
சென்னை: அதிகமாக சம்பளம் வாங்கினால் சந்தோஷமாக வாழலாம் என்று யார் சொன்னது.. ஒருவருக்கு 3.25 லட்சம் சம்பளம் வருகிறது. ஆனால் அவரது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாத அளவிற்கு கடன், கிரெடிட் கார்டு என சிக்கலாக்கி உள்ளார். இது பற்றி நெட்டிசன் ஒருவர் பகிரிந்த விஷயங்களை பற்றி பார்ப்போம்,
அதிக சம்பளம் வாங்கினால் நினைத்த பொருட்களை எல்லாம் வாங்கி சந்தோஷமாக வாழலாம் என்று நினைப்பார்கள். சொந்தமாக வீடு, கார், ஏசி, இதமான மெத்தைகள், நல்ல உடை, நினைத்த போது எல்லாம் மிக உயர்தரமான உணவகங்களில் சாப்பாடு, வார இறுதியில் சுற்றுலா, ஷாப்பிங், பிள்ளைகளுக்கு மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் லட்சங்களில் கல்வி என வாழ்க்கை சுகமாக இருக்க, அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அதிக சம்பளம் வாங்கினாலும் முறையாக திட்டமிடல் இல்லாவிட்டால் ஆடம்பரத்தில் மூழ்கி கடன்காரனாக கடைசி வரை வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிகப்படியான கடன் காரணமாக தெளிவான முடிவு எடுக்க முடியாமல் மனஉளைச்சலில் சிக்கி கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் பயணிக்கும் நிலையில் இன்றைய இளைஞர்களும் பெண்களும் சிக்கி கொள்கிறார்கள். ஐடி வேலை செய்யும் பலர் இந்த நிலைக்கு தள்ளப்படுவது நடக்கிறது.
சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் அதிக சம்பளம் வாங்குவோர் கடன், கிரெடிட் கார்டு என்ற வலையில் விழுந்து எழ முடியாமல் சிக்கி கொள்கிறார்கள். அப்படித்தான் ஒருவருக்கு 3.25 லட்சம் சம்பளம் வருகிறது. ஆனால் அவரது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாத அளவிற்கு கடன், கிரிடிட் கார்டு என சிக்கலை ஏற்படுத்தி உள்ளார். இப்படி இருந்தால் 3 கோடி இருந்தால் கூட பத்தாது. 16000 சம்பளத்துல முறையான திட்டமிடல் செஞ்சு இடம் வாங்கி, வீடு கட்டி, இருக்கவரை கூட பாத்து இருக்கேன் என்று " யாரோ" என்ற பெயரில் உள்ள நெட்டிசன் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், ஒருவருக்கு எல்லாம் போக சம்பளம் 232000 வருகிறது. அவரது மனைவிக்கு சம்பளமாக எல்லாம் போக 92000 வருகிறது. ஒட்டுமொத்தமாக இருவருக்கும் சேர்த்து 324000 கிடைக்கிறது.இருவருக்கும் பிஎப் பணமாக மட்டும் 13000 பிடிக்கப்படுகிறது. இதில் செலவுகள் என்று பார்த்தால் சொந்த வீட்டில் இருக்கிறார். வாடகை இல்லை.. எனவே அதற்காக பத்து பைசா கூட செலவு இல்லை..
டிராவலுக்காக மாதம் 15000, உணவுக்காக 20000, பெட்ரோல் 10000, சில தேவைகளுக்கானதை வாங்க 5000, பெற்றோருக்கு பணம் 20000, என மொத்தம் 550000 ரூபாய் மாதம் அவருக்கு செலவு ஆகிறது. அடுத்ததாக வீட்டுக்கடன் 70 லட்சம் (ஒரு வருடம் ஆகிறது) என்று ஒரு கடன் 25 வருடங்களுக்கு போட்டிருக்கிறார். மாத இஎம்ஐ ஆக வீட்டுக்கு 58000 கட்டுகிறார். இதுதவிர மூன்று பர்சனல் லோன், ஒரு இன்டீரியர் லோன் , ரிஜிஸ்ட்ரேசன், சிட்பண்ட் என மொத்தம் 64000 ரூபாய்க்கு மேல் போகிறது.

இது தவிர எல்ஐசிக்கு மாதம் 2000, மூன்று எஸ்ஐபி முதலீடு என 23000 போட்டுள்ளார். 3.25 லட்சம் சம்பளம் வந்தும் ஒட்டுமொத்தமாக சேமிப்பு என்றால் 250000த் தான் பண்ணுகிறார். இதை பகிர்ந்துதான் யாரோ என்ற நெட்டிசன், இப்படி இருந்தால் 3 கோடி இருந்தால் கூட பத்தாது. 16000 சம்பளத்துல முறையான திட்டமிடல் செஞ்சு இடம் வாங்கி, வீடு கட்டி, இருக்கவரை கூட பாத்து இருக்கேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், வருமான வரி கட்டுவதை குறைக்க ஹவுஸ் லோன் வாங்கி கடனாளி ஆகுறவங்க தான் பாதி பேர். ஆபீஸில் 10-15 லட்சத்துக்கு மேல சம்பளம் வாங்கினால், கூட இருக்கவனுகளே லோன் போடு மச்சான் ஐடி க்கு போற காசு நம்ம வீட்டுக்கு ஆகும்னு சொல்லி கடனாளி ஆக்கி விட்ருவாங்க என்று கூறியுள்ளார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications