கிளாம்பாக்கத்தில் ஒரே நாளில் வெளியான 3 அறிவிப்புகள்.. என்னென்ன தெரியுமா?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்குகிறது. இதன் மூலம் அங்கேயே மாதம் 1000 ரூபாய் பாஸ் உள்பட பயண சலுகை அட்டை பெறலாம்.
சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள், சென்னை கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த சூழலில், சென்னையின் தென்பகுதிக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் நேற்று தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட தொடங்கிவிட்டது.
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சை, சேலம், கோவை உள்பட சுமார் 100 நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏராளமான பேருந்துகள் தினமும் வெளியேறுகின்றன. இதுதவிர அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் தான் நிறுத்தப்படுகின்றன. விழுப்புரம் கோட்டத்தில் செல்லும் பேருந்துகள் மட்டுமே தாம்பரம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, கிளாம்பாக்கத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன.
இதனிடையே பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு கட்டண பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த கட்டண பஸ்கள், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, புதிய பஸ் நிலையத்தின் முன் வாயிலில் இறக்கிவிடுகின்றன. பின்னர் அங்கிருக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்கிறது. இதற்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த பஸ்களில் எந்தவித பஸ் பாசும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்குகிறது. இதன் மூலம் அங்கேயே மாதம் 1000 ரூபாய் பாஸ் உள்பட பயண சலுகை அட்டை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் எனில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவகங்கர் நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மலிவு விலை உணவகம் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications