இடியும் மின்னலுமாய் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து பருவக்காற்று வீசுவதால் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

வானிலை மையம் கணித்தது போல நேற்று காலை நேரத்தில் சென்னை, காரைக்காலில் கனமழை பெய்தது. நேற்று மாலை நேரத்தில் திருப்பூர், தேனி, விருதுநகர், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்தது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல ஊர்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு எங்கெங்கு மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையிலும் புறநகரிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தேனி, திருப்பூர்.திண்டுக்கல், கோவையிலும் மலைப்பகுதிகளிலும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 72 மணிநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
கடந்த 24 மணிநேரத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 17 செமீ மழையும் விருதுநகரில் 16 செமீ மழையும் பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 12 செமீ மழையும், மதுரை உசிலம்பட்டியில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications