Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகை வீட்டில் தம்பதி போல உல்லாச வாழ்க்கை.. முளைச்சு மூணு இலை விடல.. அதுக்குள்ள? யாரிந்த 3 சிறுமிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.. இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால், சில சிறார்கள் தங்களின் எதிர்காலத்தையும், பாதுகாப்பையும் யோசிக்காமல் எடுக்கும் விபரீத முடிவுகளால், அவர்களது பெற்றோர்கள் நிலைகுலைந்து போய்விடுகின்றனர்.. அப்படியொரு சம்பவம்தான் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.

நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, சிறார்களின் நலனை காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணையாய் நிற்கின்றன..

Rental house 3 girls couple

ஆனாலும்கூட, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே சந்தேகத்துக்கிடமாகி விட்டது. சமீபகாலமாக, சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அதிலும் படித்த பெண்களே போக்சோவில் கைதாகி வருவது, வருத்தத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது..

போக்சோவில் கைதுகள்

இதில் கைதாகும் பெண்கள், ஆசிரியைகள் என்பது அதைவிட வேதனையான விஷயமாகும். எனவே சிறுமிகளை மட்டுமல்ல, சிறுவர்களையும் சேர்த்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இன்று இங்கு ஏற்பட்டுள்ளது.. பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் கூறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதிலும், கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் தற்போது கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் மற்றும் மாணவிகள்கூட தற்போது மது அருந்துகிற வழக்கத்துக்கு ஆளாகியிருப்பது இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பெருகிட காரணமாகிவிடுகிறது.

அதேபோல, ஆபாசமான திரைப்படங்கள், செல்போன், யூடியூப் போன்றவைகளில் வெளிப்படையாக ஒளிபரப்பப்படும் உணர்ச்சியை தூண்டும் வசனங்கள், போட்டோக்கள் போன்றவையும் முக்கிய காரணமாக அமைந்து விடுவதை நம்மால் மறுக்க முடியாது.

3 தோழிகள்

இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுமிகள் தற்போது செய்துள்ள காரியம், பொதுமக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அக்பர்பூர் தொகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் கூறுகிறார்கள்.. அங்கு வசித்து வரும் 3 சிறுமிகளும் நெருங்கிய தோழிகள் ஆவர்.. இவர்கள் 3 பேரும் கடந்த மாதம் 19ம் தேதி, அவரவர் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்கள்.. ஸ்கூலுக்கு சென்று மார்க் ஷீட் வாங்கி வருவதாக அவரவர் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு, வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்கள்.

ஒரே வீட்டில் குடித்தனம்

3 பேருமே குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்று, அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.. வாழ்வாதாரத்துக்காக அங்குள்ள ஒரு ஜவுளி கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்துள்ளனர்.. இந்த 3 தோழிகளில், 2 தோழிகள் காதலித்து வந்துள்ளனர்.. பிறகு இவர்கள் 2 பேரும் திருமணமும் செய்து கொண்டு, அதே வீட்டில் குடும்பம் நடத்த துவங்கினர்.. இவர்களுடன் 3வது தோழியும் அதே வீட்டில் தங்கியிருந்தார்.

இதற்கு நடுவில் மார்க் ஷீட் வாங்க போன மகளை, 3 பேரின் பெற்றோர்களும் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.. இறுதியில்தான், அவர்கள் வேறு மாநிலத்துக்கு சென்றுவிட்டதையறிந்து, சூரத் சென்றனர்.. அங்கு அவர்களது வீட்டை கண்டுபிடித்து, பீகாருக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

காலமெல்லாம் ஒன்றாக வாழ ஆசை

அப்போது, திருமணம்செய்து கொண்ட ஜோடியானது, தங்களது காதலை பற்றி போலீசாரிடம் விளக்கியது.. நீண்ட காலமாகவே காதலித்து வந்ததாலும், ஒருவரையொருவர் பிரிய மனமில்லை என்பதாலும், காலமெல்லாம் ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசையாலும், இப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறினார்கள்.

தங்களது விருப்பத்துக்கு பெற்றோர்கள் இடையூறாக இருப்பார்கள் என்பதால்தான் இப்படியொரு முடிவை எடுத்ததாகவும் சொன்னார்கள்.. எனினும், இதுகுறித்து எந்த முடிவையும் போலீசார் இன்னும் எடுக்கவில்லையாம்.. 3 சிறுமிகளிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+