வேலையை காட்டும் கொரோனா.. தமிழகத்தில் ஆக்ஸிஜன் உதவியுடன் ஐசியூவில் 3 பேர் அனுமதி.. பரபரக்கும் டேட்டா!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் 3 பேர் சிகிச்சை வருகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக 2 நாட்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவிட்டி சதவீதமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு 100 பேர் என்றால் அவர்களில் 6 பேருக்கு கொரோனா உறுதியாகிறது. அது போல் சென்னையில் 100 இல் 8 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி 0.4 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரோனா: புதிதாக வரும் கொரோனா தொற்று இதற்கு முன்பு வந்த அலைகளை போல் இல்லாமல் வேகமாகப் பரவி வருகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அறிகுறிகளை பொருத்தவரை சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படும் என தெரிவிக்கிறார்கள். இணை நோய் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அறிகுறிகள் என்ன: தொடர்ந்து கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால், சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கல் ஓட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆகத்தான் இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் படிப்படியாக எண்ணிக்கை உயர்ந்து தற்போது 180 பேருக்கு தினசரி தொற்று ஏற்படுகிறது. நேற்று முன் தின் புதிதாக தமிழகத்தில் 198 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்றைய தினம் 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவையா: இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 1,216 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 82, செங்கல்பட்டில் 12, கோவையில் 12 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 3,595 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. கடந்த 4 ஆம் தேதி நிலவரப்படி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவிற்கு இல்லை. ஆனால் தற்போது நிலை மாறிவிட்டது.

ஐசியூவில் 3 பேர் சிகிச்சை: மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர். மேலும் ஆக்ஸிஜன் படுக்கையில் நாகையில் 6 பேரும் சென்னையில் 4 பேரும், சேலத்தில் 4 பேரும், தூத்துக்குடியில் 2 பேரும் உள்ளனர். எனவே கூட்டம் நெரிசலாான பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications