வெறும் 24 மணி நேரத்தில்.. நாட்டையே உலுக்கி போட்ட.. 3 சம்பவங்கள்.. இப்படியே போனால் நாடு என்ன ஆகும்?
சென்னை: கடந்த சில மணி நேரங்களில் நாடு முழுக்க நடைபெற்ற 3 பெரிய குற்ற சம்பவங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. முக்கியமாக மிக கொடூரமான முறையில் நடைபெற்று இருக்கும் இந்த குற்ற சம்பவங்கள் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவை என்னென்ன குற்றங்கள் என்று இங்கே வரிசையாக பார்க்கலாம்.
நவி மும்பையில் உள்ள ஊரான் பகுதியில் 20 வயது பெண் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது சடலம் ரயில் நிலையம் அருகே உள்ள புதர்களுக்குள் வீசப்பட்ட நிலையில் போலீசார் மூலம் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.

கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அவரது முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். அவரை காதலித்து, பின்னர் பிரேக் அப் செய்த தாவூத் ஷேக் என்ற இளைஞர் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீஸாரின் கூற்றுப்படி, இறந்தவர் ஊரானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த யாஷ்ரீ ஷிண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளார். பேலாபூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அலுவலகத்திற்கு வீட்டை விட்டு வெளியே வந்த யாஷ்ரீ ஷிண்டே காணாமல் போனார். குடும்ப உறுப்பினர்கள் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவரை தேடத் தொடங்கினர். அவர் கிடைக்காத நிலையில், ஊரான் காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதன்பின் அது காணாமல் போன யாஷ்ரீ ஷிண்டேதான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை காதலித்து, பின்னர் பிரேக் அப் செய்த தாவூத் ஷேக் என்ற இளைஞர் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் 2: பெங்களூரில் நடந்த பிஜி கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. பெங்களூரில் தங்கும் விடுதிக்குள் 24 வயது பெண்ணை கொடூரமாக கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் நேற்று மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். பெங்களூரில் தங்கி வந்த கிருத்தி குமாரி, பீகாரைச் சேர்ந்தவர். இவர்தான் கொலை செய்யப்பட்டது.
பெங்களூரின் பரபரப்பான கோரமங்களா பகுதியில் பிஜி விடுதியில் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இரவு, ஒரு நபர், கத்தியுடன் அங்கே வந்து கிருத்தி குமாரியை தாக்கி உள்ளார். இரவு 11 மணியளவில் கட்டிடத்திற்குள் ஊடுருவி கிருத்தி குமாரியை அடித்து உதைத்து கதற கதற அவரின் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே கிருத்தி குமாரி பலியானார்.
போலீசார் விசாரணையின் படி, அந்த நபர் விடுதியில் உள்ள கிருத்தி குமாரியின் அறை தோழியின் காதலன். கிருத்தி குமாரி தனது காதலுக்கு இடையூறாக இருந்துள்ளதால் இந்த கொலையை செய்துள்ளார். கொலை செய்த நபர் கிருத்தி குமாரியின் தோழியை காதலித்து வந்துள்ளார். ஆனால் கீர்த்தி குமாரி பேச்சை கேட்டு அவரின் தோழி அந்த இளைஞரை பிரேக் அப் செய்துள்ளார். பிரேக் அப்பிற்கு காரணம் கிருத்தி குமாரிதான் என்பதை உணர்ந்து கோபத்தில் இந்த கொலையை செய்துள்ளார் அந்த இளைஞர்.
சம்பவம் 3: தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி கடையில் அதிர வைக்கும் கொலை சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. அங்கே கடந்த 6-ம் தேதி முதல் புதிதாக அந்த பிரியாணி கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் வி.ஜெட்டி அள்ளி பகுதியை முகமது ஆசிக் (25) கொலை செய்யப்பட்டு உள்ளார். அங்கே இவர் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் செட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த 1.ஜனரஞ்சன் 2. ஜன ஹம்ச-ப்ரியன்.இவர்களது சகோதரியும்- முகமது ஆசிக் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையேயான காதலை ஒப்புகொள்ளாத பெண் வீட்டார் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications