50%.. "கேம் மாறிடுச்சே".. 2 மேட்டர் அடியோடு சேஞ்ச்.. ஓஹோ ஓபிஎஸ்.. சிக்கலில் சிலுவம்பாளையம் பழனிசாமி?
எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு விலக வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது
சென்னை: நடந்து முடிந்த தேவர் ஜெயந்தி விழாவையடுத்து, அதிமுகவில் சலசலப்புகள் அதிகரித்துள்ளது.. குறிப்பாக ஓபிஎஸ் பக்கம் சத்தம் அதிகமாக கேட்க துவங்கி உள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாகவே தனக்கிருக்கும் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. கடைசியாக வந்த சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகுதான், ஓபிஎஸ் மெல்ல எழுச்சி பெற்றார்.
எடப்பாடி தரப்பினரிடம் வலையை வீசி அவர்களையும் தங்கள் பக்கம் இழுக்க செய்தார்.. ஒரே மாதத்தில் ஓபிஎஸ்ஸின் கிராப் நிர்வாகிகளிடம் உயர்ந்துவிட்டதை எடப்பாடி அறியாமல் இல்லை..

பாயிண்ட் 1
அதனாலேயே பசும்பொன்னுக்கு செல்வதை தவிர்த்தார்.. சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய நிலையில், பசும்பொன்னுக்கு வழக்கமாக சென்று கெத்து காட்டினார் ஓபிஎஸ்.. இந்த சம்பவத்தை 2 வகைகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிப்படுத்த துவங்கி உள்ளனர்.. ஒன்று, பசும்பொன்னில் கிடைத்த வரவேற்புதான் ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கு என்றும், அவர்தான் நிஜமான தலைவர், ஓபிஎஸ் கைக்கு விரைவில் அதிமுக வரும் என்று மார்தட்டி பேச துவங்கி உள்ளனர்.

பாயிண்ட் 2
இரண்டாவதாக, "கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டதாக சொல்லப்படும் ஓபிஎஸ், தன் கடமையை பசும்பொன்னில் சரியாக செய்தார், ஆனால், பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்படும் எடப்பாடி பழனிசாமி, தன் கடமையில் இருந்து தவறிவிட்டார் என்று எடப்பாடி டீமில் உள்ளவர்கள் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துள்ளனராம். பசும்பொன்னில் ஓபிஎஸ்ஸுக்கு இருந்த செல்வாக்கை காட்டியே தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் தீவிரமாகவே ஈடுபட்டுள்ளனர்..

டேமேஜ்
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை டேமேஜ் செய்யவும் மும்முரமாகி வருகின்றனர். .இதற்கான முதல் கல்லை வீசியெறிந்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர், மருது அழகுராஜ்தான்.. "இந்த தேசத்திற்கு இன்னுயிர் தந்த பூலித்தேவன் தொடங்கி, மருதிருவர், பசும்பொன் தேவர் உள்ளிட்ட தியாகத் தலைவர்களுடைய குருபூஜைகளுக்கும் வரவில்லை.. இரட்டை இலைச் சின்னத்தை தேர்ந்தெடுத்து தந்து, அதன்மூலம் அதிமுகவுக்கு முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்த திண்டுக்கல் மாயத்தேவரின் மரணத்திற்கும் வரவில்லை.

முதல் புள்ளி
இப்படி பயந்து நடுங்கி, பதுங்கு குழி அமைத்துக் கொண்டு வீதிக்கு வருவதற்கே அச்சப்படுகிற அளவுக்கு பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்ட எடப்பாடி பழனிசாமி, தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஒன்றரை கோடி தொண்டர்கள் கட்டிக்காக்கும் அதிமுகவை விட்டு ஒதுங்கி விடுவதே நல்லது" என்று முதல் புள்ளியை வைத்தார். இதற்கு பிறகு ஓபிஎஸ்ஸின் ஒவ்வொரு ஆதரவாளரும், பசும்பொன் சம்பவத்தை எடுத்துரைத்து அவருக்கு செக் வைத்து கொண்டிருக்கிறர்கள்.. ஒரு டிவி சேனலுக்கு, ஓபிஎஸ்ஸின் மற்றொரு ஆதரவாளர் கண்ணன்ஜி ஒரு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது:

சிலுவம்பாளையம் சைலண்ட்
"பசும்பொன்னார் மறைவுக்கு, எம்ஜிஆரும், அண்ணாவும், அச்சமூக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று, 1967-ல் ஆட்சிக்கு வந்தது.. அந்த மக்கள் சாதி பார்த்து அப்போது வாக்களிக்கவில்லை.. எம்ஜிஆர் 1977-ல் ஆட்சிக்கு வரும்போதும் தேவர் இன மக்கள்தான் அதிகமாக வாக்களித்தார்கள்.. முக்குலத்தோர் சமுதாயம்தான் மொத்தமாக வாக்களித்தது.. அப்படி வாக்களித்த அந்த மக்கள், எம்ஜிஆரை தங்கள் இனம் என்று நினைத்து வாக்களிக்கவில்லை.. அதேபோல்தான், சிலுவம்பாளையம் பழனிசாமிக்கும், ஓபிஎஸ்ஸூக்கும், சின்னம்மாவுக்கும், டிடிவிக்கும் வாக்களிப்பார்கள். ஆனால், சாதி பார்த்து ஓட்டு போடமாட்டார்கள்..

உதவாக்கரைகள்
ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் சாதி பார்த்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதுமில்லை.. ஆனால், கவுண்டர் சமுதாயமே, பழனிசாமி மட்டும்தான் தங்களுக்கு தலைவராக ஆக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை.. காரணம், சாதியை வைத்து, சாதியை பிளவுபடுத்தி, எக்காலத்திலும் அந்த இன மக்கள் குளிர்காய்ந்ததாக வரலாறே கிடையாது.. அப்படிப்பட்ட இன மக்களுக்கு, சிலுவம்பாளையம் பழனிசாமி, சிவி சண்முகம், உதயகுமார் போன்ற உதவாக்கரைகள் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.. தமிழகத்துக்கே ஈனப்பிறவிகள், புல்லுருவிகள்.. இந்த கறைகள் துடைத்தெறிய வேண்டும்..

சிலுவம்பாளையம்
சிலுவம்பாளையம் பழனிசாமி, இனிமேல் நந்தனத்தில்கூட மரியாதை செலுத்தமுடியாது.. காரணம், வரும் ஆண்டிலேயே அவர் அரசியல் அனாதை ஆக்கப்பட்டுவிடுவார்.. பழனிசாமியை சுற்றி ஒரு கும்பல் சுற்றி கொண்டிருக்கிறது.. கொள்ளையடித்த பணத்தை வைத்து, அரசை ஏமாற்றி அபகரித்த பணத்தை வைத்து, சம்பந்தியை வைத்து ஏமாற்றி பறித்த பணத்தை வைத்து, அந்த பணத்தை சுற்றியிருப்பவர்களுக்கு கொடுத்து, பணம் மூலம் கட்டமைப்பை ஏற்படுத்தி கொண்டு, பயணிக்க நினைக்கிறார்.. பணம் என்பது ஒரு கருவிதானே ஒழிய, பணம், பாசத்தை தந்து விடாது, பணம் ஒரு உறவை ஏற்படுத்தி தராது.. பணம், இயக்கத்தை நடத்திவிடாது.. விரைவில் பழனிசாமி தரப்பு அழிந்துவிடும்.. இதற்கு பசும்பொன்னில் நடந்த சம்பவமே உதாரணம் ஆகும்" என்று பேசியுள்ளார்..

அவுட்டான தூது
சமீபகாலமாகவே சத்தமின்றி இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. 2, 3 முறை ரகசிய தூது ஓபிஎஸ் தரப்புக்கு அனுப்பியதாக சொல்லப்பட்டது.. ஆனால் அது தோல்வியிலேயே முடிந்தநிலையில், அடுத்து என்ன செய்வது? என்ற யோசனையிலும் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. சமரசம் என்றாலே 50-50% என்ற வழக்கமான நிலைப்பாட்டிற்குதான் ஓபிஎஸ் நிச்சயம் வருவார் என்பதால், இதற்கு எடப்பாடி ஒப்புக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.. காரணம், "ஒருங்கிணைப்பாளர்" பதவியை இந்த நிமிடம்வரை, ஓபிஎஸ் விட்டுத்தர தயாரில்லை என்பதே சிலுவம்பாளையத்துக்கு பாஸ் செய்யப்பட்ட மெசேஜ் என்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications