முதலில் அண்ணாமலை.. அடுத்தடுத்து சீமான், எடப்பாடி மீது வழக்குப்பதிவு.. ரவுண்டு கட்டும் திமுக அரசு?
அடுத்தடுத்து 3 முக்கிய அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே வாரத்தில் தமிழ்நாட்டின் 3 முக்கிய அரசியல் தலைவர்கள் மீது அடுத்தடுத்து தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
திமுக அரசு மீது தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை கடுமையாக முன்வைத்து வரும் நிலையில், வெவ்வேறு விவகாரங்களில் மூவர் மீதும் ஒரே சமயத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வட மாநில தொழிலாளர் விவகாரம்
வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் பொய்யான தகவல் பரவிய நிலையில், பொய்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், திமுகவினர் வட மாநிலத்தவர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசியதும், இந்திக்கு எதிராகப் பேசியதும் தான் இதுபோன்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அண்ணாமலை மீது வழக்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள் வடமாநிலத்தவர் மேல் தொடரும் வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீமான் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில், "வட இந்தியர்களைப் பிடித்து அடித்து அவர்களின் மீது வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன். ஒரு வாரத்திற்குள் அவர்களாகவே மூட்டையைக் கட்டவைத்து விடுவேன்" என சீமான் பேசியிருந்தார். இந்த நிலையில் சீமான் மீது 153 (b)(c), 505(1) (c), 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி சர்ச்சை
இதேபோல, சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி. விமான நிலைய பேருந்தில் பயணித்த போது உடன் வந்த சக பயணியும் அமமுகவைச் சேர்ந்தவருமான ராஜேஸ்வரன் என்பவர் துரோகி எடப்பாடியார் எனப் பேசி ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ பதிவிட்டார். இக்காட்சியைப் பார்த்த எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை பறித்து அவரை விமான நிலைய வளாகத்தில் சட்டையைப் பிடித்து இழுத்து வந்தார்.

ஃபேஸ்புக் லைவ்
ராஜேஸ்வரனை அங்கிருந்த அதிமுகவினர் சிலர் தாக்கிய வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய ராஜேஸ்வரனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ராஜேஸ்வரன், ஃபேஸ்புக் லைவில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய போது, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்போனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார்.

எடப்பாடி மீது வழக்கு
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன், எம்.எல்.ஏ பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக தரப்பு அளித்த புகாரின் பேரில் ராஜேஸ்வரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் மீது
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தமிழ்நாடு அரசியலின் முக்கிய தலைவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வட மாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுரை ஏர்ப்போர்ட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 3 அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் திமுக அரசு, ரவுண்டி கட்டிவிட்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications