ரூ.240 கோடியில் 300 ஹெக்டேர் பரப்பளவில் சேமிப்பு கிடங்குகள்- - அமைச்சர் சக்கரபாணி தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் 240 கோடி மதிப்பீட்டில் 300 ஹெக்டேர் பரப்பளவில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் முடிவடையும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரப்பானி தலைமையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் நெல் கொள்முதல், நெல் சாகுபடி பரப்பு அதிகரிப்பது, நெல் உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழ்நாட்டில் ரூபாய் 240 கோடி மதிப்பீட்டில் 300 ஹெக்டேர் பரப்பளவில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் முடிவடையும். மற்ற அரசு அலுவலக கட்டிடங்களில் நெல்லை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை தனியார் ஆலைகளுக்கு அனுப்ப திங்கள் கிழமை டெண்டர் விடப்பட உள்ளது.
மேலும் வழக்கமாக ஆண்டு தோறும் அக்டோபர் 1 ம் தேதி தான் நெல் கொள்முதல் செய்வோம், ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதியை நெல்கொள்முதல் செய்யவுள்ளோம். அடுத்த ஆண்டு 5 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக குருவை சாகுபடி செய்யப்பட உள்ளது.
கடந்த ஆண்டு 43 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 50 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை விட டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட உள்ளது. வியாபாரிகள் ஊடுருவல் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக பயன் அடையும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications