"சரி சீமான், நீ முதலமைச்சர் ஆகிவிட்டால் பணத்துக்கு என்ன பண்ணுவே?.. அசரடித்த சீமான்.. திகைத்த அரங்கம்
நாம் தமிழர் கட்சி சீமான் தன்னுடைய தொண்டர்களுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை: மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த பணம் இல்லை என்கிறார்கள்.. ஆனால், தேர்தல் வந்துவிட்டால் பணம் எங்கிருந்து தான் வருகிறது என தெரியவில்லையே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தமுறை சீமானின் இடைத்தேர்தல் அரசியல் வித்தியாசமாக காணப்பட்டது.. புது தேர்தல் வியூகத்தையும் கையில் எடுத்திருந்தார்.. எப்போதுமே ஜாதி ஓட்டுக்களை குறி வைக்காத சீமான், இந்த முறை தன்னுடைய வேட்பாளர் தேர்வு முதல் அத்தனை விஷயங்களையும் கவனமாகவே செய்திருந்தார்.
அதேபோல, சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதிலும் முனைப்பு காட்டினார்.. திமுகவின் அதிருப்தி வாக்குகளையும், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளையும் பெற போவது சீமானா, எடப்பாடியா? என்ற அளவிற்கு களம் தகித்து காணப்பட்டது.

டாப் 3
ஆனால், 10,627 வாக்குகளை மட்டுமே பெற்று அதே மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார் சீமான்.. தற்போது தன்னுடைய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.. அதுகுறித்து கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார் சீமான்.. அதில், "பணபலம், அதிகார பலம், பட்டிகளில் அடைத்து வைத்து மக்களைச் சந்திக்கவிடாமல் ஆளுங்கட்சியினர் செய்த சனநாயக படுகொலை, குண்டர்களை ஏவி நடத்திய வன்முறை வெறியாட்டம், தேர்தல் ஆணையத்தின் செயலற்றத்தன்மை என அத்தனை தடைகளையும் தாண்டி இடைத்தேர்தலிலேயே 10,827 வாக்குகளை நாம் பெற்றுள்ளோம் என்றால் பொதுத்தேர்தல்களில் இது பன்மடங்காகப் பெருகும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

மானுட குலத்தின் எதிரி
இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாள் முதல் வாக்கு எண்ணிக்கை நாள் வரை களத்தில் நின்று அயராது பாடுபட்ட பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகளும், அன்பும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த முறை பிரச்சாரங்களில் வழக்கம்போல திமுகவை சீண்டியிருந்தார்.. குறிப்பாக அதிமுக, திமுக கட்சிகளின் பணப்பட்டுவாடா குறித்து தொடர்ந்து விமர்சித்து கொண்டேயிருந்தார். குறிப்பாக, "காங்கிரஸ் என் இனத்தின் எதிரி. பாஜக மானுட குலத்தின் எதிரி. இனி ஒரு முறை நீங்கள் இவர்களுக்கு வாக்களித்து தவறு செய்தால் இந்த பூமியை ஒருத்தராலும் காப்பாற்ற முடியாது.. இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்கிறார்கள். பணம் கொடுக்காமல் உங்களால் என்னை வீழ்த்த முடியுமா?

+2000 + 3000
நீங்கள் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கின்றீர்கள். நான் எங்கே வெற்றி பெற்று விடுவேனோ என்ற பயத்தில் இவ்வளவு வேலை நடக்கிறது. களம் இப்போது என் கையில் உள்ளது.. காசு மட்டும்தான் அவர்கள் கையில் உள்ளது.. திமுக 3000 ரூபாய் தந்ததாக சொல்கிறார்கள்.. அதிமுக 2000 ரூபாய் தந்ததாக சொல்கிறார்கள்.. ஒருவேளை கடைசி 3 நாட்களில் இன்னும் அதிகப்படியான பணம் கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.. தேர்தல் முடிந்து, ரிசல்ட் வெளியாகி, தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த நிலையிலும்கூட, மீண்டும் சீமான் பணப்பட்டுவாடா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன்
"செஞ்சமர்" படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது.. இதில் சீமான் கலந்துக் கொண்டு விழாவில் பேசும்போது, "தமிழர்களுக்கு என்று இலக்கிய சான்று இருக்கிறது.. ஆனால், வரலாற்று சான்றுகள் இல்லை... பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை நெடுந்தொடராக எடுக்க வேண்டும் என்று நானும், இயக்குனர் வெற்றிமாறனும் பேசி வருகிறோம்.. ஆனால், இப்போது அதற்கான அரசியல் சூழல் மற்றும் பொருளாதார சூழல் இல்லை. ஒருவேளை, நீ முதலமைச்சராகி விட்டால், பணத்திற்கு என்ன செய்வாய் சீமான், என்று கேட்கிறார்கள். இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்தவர்களிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பேன்..

தம்பிகள் சீமான்
மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த காசு இல்லை என்கிறார்கள்.. ஆனால், தேர்தல் வந்துவிட்டால் மட்டும் எங்கிருந்து தான் இந்த காசு வருகிறது? என்று தெரியவில்லை. மக்களை நினைத்தால்தான் பாவமாக உள்ளது. ஸ்மார்ட் வாட்ச், செல்போன் வரை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.. எம்எல்ஏ எங்க ஊருக்கு வருவாரா, நல்லது செய்வாரா என்று எதிர்பார்த்தது போய் எங்க ஊர் எம்எல்ஏ எப்போ சாவாரு? எப்போது இடைத்தேர்தல் வரும்? என்று மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மோசமாக போயிவிட்டதே என்பது வலி தான்... இளைஞர்களுக்கு அரசியல் குறித்த புரிதல் வர வேண்டும். அருகில் இருக்கும் கேரளாவைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். சீமானின் இந்த பேச்சுக்களை அவரது தம்பிகள், வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications