மட்டன் எடுக்கறீங்களா? சென்னையில் "4 இடத்தில்" ஆட்டுக்கறி விற்கிறார்களாமே? என்னாது, 30000 ஆடுகளா? பலே
சென்னை: ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும்நிலையில், சென்னை மாவட்டத்திலும் கொண்டாட்டம் களை கட்ட துவங்கியிருக்கிறது. அந்தவகையில் ஆடுகள் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது.
திண்டுக்கல், மதுரை, வேலூர் என தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது.. இந்த சந்தைகளை நம்பியே, லட்சக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார்கள்.

பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், ஆடி மாதம் போன்ற விசேஷ நாட்களிலும் இதுபோன்ற கால்நடை சந்தை படுபிஸியாக இருக்கும். காரணம், கிராம பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறுவதால், அசைவ விருந்து பரிமாறுவார்கள்..
செம்மறி ஆடுகள்: விரைவில் ரம்ஜான் பண்டிகை வருவதால், இதை கணக்கு செய்தும் வியாபாரிகள் தயாராகி கொண்டிருக்கிறார்கள். இதற்காக, நிறைய செம்மறி, வெள்ளாடுகள் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால், அதிகாலை 2 மணி முதல் ஆடு விற்பனை களைகட்ட துவங்கிவிடுகிறது.
நேற்று முன்தினம், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டு சந்தையில், ஆடுகளின் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகி உள்ளது. அன்றைய ஒரு நாள் மட்டுமே, ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.
ரம்ஜான் பண்டிகை: ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம், ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளதாம்.. இதற்கு காரணம், ரம்ஜான் பண்டிகையால் வரத்து குறைவு என்பதால் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.
அந்த வகையில் சென்னையிலும் ரம்ஜான் பண்டியையொட்டி, வியாபாரம் சூடுபிடித்துள்ளது.. வழக்கமாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக வரவழைக்கப்படும். அந்தவகையில், இப்போதும் 30 ஆயிரம் ஆடுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.. இன்று முதல் சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனையும் ஆரம்பமாகி உள்ளது.
ஆடுகள் வரத்து: இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளரான ராயபுரம் அலி சொன்னதாவது:
"ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன.. ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும்" என்றார்.
அந்தவகையில், சென்னையில் 4 சந்தைக்கும் இன்று காலை முதல் ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தைகளுக்கு வரும் ஆடுகளை வியாபாரிகள் தரம் பார்த்து வாங்கி செல்கிறார்கள்.
எதிர்பார்ப்பு: வருகிற 9-ந்தேதி வரையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்செல்வார்கள் என தெரிகிறது.. அதிலும், ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7500 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளதால், சென்னையில் மட்டுமே ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications