இதுதான் மாஸ்! ஒரே நாளில் ரூ.316 கோடி கல்விக்கடன்.. சாதித்த தமிழக அரசு! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்களின் மூலம், மொத்தம் 5,497 மாணவ மாணவிகளுக்கு ரூ.315.79 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் ஏராளமான வசதியற்ற மாணவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று உயர்கல்வி படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றைப் பெற அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுபோல ஏராளமான வாய்ப்புகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று சிறப்பு கல்வி க்கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மற்றும் வங்கிகள் இணைந்து தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்கள் நேற்று ஒரு நாள் முழுவதும் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டு எளிதாக கல்விக்கடன் பெறுமாறு மாணவர்கள் பெற்றோர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, இந்த சிறப்புக் கல்விக் கடன் முகாம்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, கல்விக்கடன்களைப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், நேற்று ஒரே நாளில் கோடிக்கணக்கில் கல்விக்கடன் வழங்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் டிப்ளமோ படிப்புகள், தொழில்முறை படிப்புகள் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், முதுகலைப் பட்டப் படிப்புகள் படிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்களின் மூலம், மொத்தம் 5,497 மாணவ - மாணவியர்களுக்கு ரூ.315.79 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், 'உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிலையை நாம் எட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, அதற்குரியத் திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இதற்காக நமது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் மூலம் ஓராண்டில் மட்டும், 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக்கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகளை தொடங்கினோம்.
இந்த நிலையில், நம்முடைய திராவிட மாடல் அரசின் முன்னெடுப்பில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்களின் மூலம், மொத்தம் 5,497 மாணவ - மாணவியர்களுக்கு ரூ.315.79 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு. கழக அரசின் முயற்சியால் 16,688 மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ரூ.1,022 கோடி அளவுக்கு கல்விக்கடன் சென்றடைந்துள்ளது. இந்தத் தொகை என்பது ஒட்டுமொத்த நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு - அறிவுப் புரட்சிக்கான முதலீடு என்பதில் பெருமை கொள்கிறோம். கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், படிப்பில் சாதித்து, வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications