எந்த அறிகுறியும் இல்லாமல் இறந்த 7 பேர்.. தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 38 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 14 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 38 பேரில் 7 பேர் எந்த அறிகுறியும் இல்லாமல், கொரோனா வைரஸ் தொற்றால் மட்டுமே உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் பலி

சென்னையில் பலி

கொரோனாவால் உயிரிழந்த 435 பேரில் 347 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 24 பேர், திருவள்ளூரில் 22 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 400 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 பலி எண்ணிக்கை எப்படி

பலி எண்ணிக்கை எப்படி

தமிழகத்தின் பிற பகுதியில் மொத்தம் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 38 பேரில், 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனா தொற்றால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 435 பேரில் பெரும்பாலோனர் 50 வயதை கடந்தவர்கள் ஆவர். உயிரிழந்த பலரும் வயதானவர்கள் ஆவர். அத்துடன் நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஆவர்.

அறிகுறி இல்லாமல் பலி

அறிகுறி இல்லாமல் பலி

தமிழகத்தில் இன்று உயிரிழந்த 38 பேரில் 7 பேர் எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் 30 வயது ஆண் , 30 வயது பெண் மற்றும் 61 வயது பெண், திருவண்ணாமலையைச் சேர்ந்த 60 வயது பெண், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 38 வயது பெண், 58 வயது ஆண் விருதுநகரில் 34 வயது ஆண், சென்னைய் சேர்ந்த 56 வயது பெண் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 40 வயது ஆண்,, சென்னையில் 47 வது ஆண் உள்ளிட்டோர் வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    சென்னையில் 277 கொரோனா நோயாளிகள் மாயம்..
    இன்றைய மரணம்

    இன்றைய மரணம்

    இன்று கொரோனாவால் உயிரிழந்த 38 பேரில் 19 பேர் 60வயதை கடந்தவர்கள் ஆவர். 11 பேர் 50 வயதை கடந்தவர்கள் ஆவர். 7 பேர் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். சுவாச பிரச்சனை, மாரடைப்பு, கடுமையான நிமோனியா காய்ச்சல் போன்ற பிரச்னைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அண்மைக்காலமாக இளம் வயதில் அதிகமாக இறப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. இன்றைக்குதான் இதுவரை இல்லாத அளவாக தமிழகத்தில் கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+