டெண்டர் முறைகேட்டால் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு? TANGEDCO மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!
சென்னை: முறைகேடான டெண்டர் மூலம் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், TANGEDCO மற்றும் முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய போட்டி ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பல்வேறு திறனில் 45,800 மின்மாற்றிகள் 1182 கோடி ரூபாயில் கொள்முதல் செய்வதற்காக 10 டெண்டர்கள் கோரப்பட்டன. அதில், 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, 500 கிலோ வாட் திறனுடைய 800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய 2021 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில், 26 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். அந்த ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக 13 லட்சத்து 72 ஆயிரத்து 930 ரூபாய் என ஒரு மின்மாற்றியின் டெண்டர் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு 26 ஒப்பந்ததாரர்களும் ஒரே மாதிரியான விலைப் பட்டியலை சமர்ப்பித்திருப்பது என்பது முறைகேடான டெண்டர் நடைமுறையாக உள்ளது. மேலும் கூட்டு சதி நடந்துள்ளதையும் வெளிக்காட்டுகிறது. இதனையடுத்து ஒரு மின்மாற்றி 12 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாய் என விலை இறுதி செய்யப்பட்டு, அந்த 26 ஒப்பந்ததாரர்களில்16 பேரை இறுதி செய்து அவர்களுக்கு தலா 50 எண்ணத்தில் 800 மின்மாற்றிகள் 99 கோடியே 98 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், ஒரு மின்மாற்றியின் விலையே, 7 லட்சத்து, 89 ஆயிரத்து, 750 ரூபாய்தான். அதாவது, 800 மின்மாற்றிகளையும், 63.18 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்க முடியும். ஆனால் 4 லட்சத்து 60 ஆயிரத்து 50 ரூபாய் அதிக விலை கொடுத்து மின்மாற்றிகளை வாங்கி ஒரு டெண்டரில் அரசுக்கு சுமார் 36 கோடியே 80லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
அதேபோல 200 கிலோ வாட் மின்மாற்றி டெண்டரில் பங்கேற்ற 30 ஒப்பந்ததாரர்களும், ஒரே மாதிரியாக 7 லட்சத்து 7 ஆயிரத்து 823 ரூபாய் என ஒப்பந்த விலைபட்டியல் சமர்பித்துள்ளனர். மேலும் 100 கிலோவாட் மின்மாற்றி டெண்டரில் பங்கேற்ற 33 ஒப்பந்ததாரர்களும் ஒரே மாதிரியாக 4 லட்சத்து 79 ஆயிரத்து 80 ரூபாய் என ஒப்பந்த விலைபட்டியல் சமர்பித்துள்ளனர்.
இவ்வாறு 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், சுமார் 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில், TANGEDCO மீதும், முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த சிவராமன் என்பவர் இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக அறப்போர் இயக்கம் சார்பில் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில் ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என தமிழக மின்சார வாரியம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications