அமலாக்கத்துறை ஒன்றும் போலீஸ் அல்ல.. கபில் சிபல் வாதம் சரி! 3வது நீதிபதி தீர்ப்பில் முக்கிய பாயிண்ட்!
சென்னை: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில், நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பை, 3வது நீதிபதி கார்த்திகேயன் உறுதி செய்தார். அதேசமயம், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதங்கள் சரியானது என்றும் ஏற்றுக்கொண்டுள்ளார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 3-வது நீதிபதி தீர்ப்பளித்தார்.

முதல் நாள் செந்தில் பாலாஜி தரப்பின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது, தங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறை பட்டியலிட்டு வாதாடிய துஷார் மேத்தா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை எனத் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் அமலாக்கத்துறையினருக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், சம்மன் அனுப்புவதற்கும் சோதனை மற்றும் பறிமுதல் செய்வதற்கும் மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது, புலன் விசாரணை செய்வதற்கு உரிமை இல்லை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் போலீசார் அல்ல என்ற வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன், பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்புடன் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளார். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். எனவே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
அதேசமயம், அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளாக செயல்படுவதற்கு சட்டத்தில் எங்கும் வகைப்படுத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டவரை, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய உரிமை இல்லை என்ற கபில் சிபல் வாதம் சரியானது. நன்கு கற்றறிந்த மூத்த வழக்கறிஞரின் இந்த வாதத்தை யாராலும் மறுக்க முடியாது என்றும் 3வது நீதிபதி கார்த்திகேயன் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications