திருவான்மியூர் சரோஜா வீட்டில் தங்கம்.. கட்டுக்கட்டாக பணம்.. வேலைக்கார பெண்கள் போட்ட மாஸ்டர் பிளான்
சென்னை: சென்னை திருவான்மியூரில் தனியாக வசிக்கும் பெண் வீட்டில் 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்ததாக அவரது வீட்டில் வேலை பார்த்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சரோஜா என்ற மூதாட்டி, சென்னை திருவான்மியூர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது வீட்டு பீரோவில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகையால் ஆசையில் விழுந்த வேலைக்காரர்கள் போட்ட திட்டம் தான் மிரள வைக்கும் ரகம்.
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் 65 வயதாகும் சரோஜா. இவருடைய கணவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார். இவர் இறந்து விட்டார். இவரது மகள் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வாழ்கிறார். சரோஜா மட்டும் திருவான்மியூர் பகுதியில் தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் ஏராளமான தங்க நகைகளும், ரொக்கப்பணமும் பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம். தனியாக வாழும் அவர் கோடீஸ்வரர் என்று கூறப்படுகிறது..

இதனிடையே தனியாக வசிக்கும் மூதாட்டி சரோஜாவிற்கு உதவி செய்வதற்காக , அவரது வீட்டில் கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா மணி (36), புவனேஸ்வரி (36) ஆகிய 2 பெண்கள் மாறி, மாறி வீட்டு வேலை செய்து வந்தார்கள். சரோஜாவை மகளும் பெரிதாக தேடிவரவில்லை.. எப்போதுமே தனியாக வாழும் சரோஜாவின் வீட்டில் உள்ள தங்க நகைகளை அபகரிக்க வேலைக்கார பெண்கள் 2 பேரும் இணைந்து சதி திட்டம் தீட்டினார்களாம். இவர்கள் தங்களுடைய திட்டத்தை சந்தேகம் வராத அளவிற்கு நிறைவேற்றுவதற்காக தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், மனோகரன் ஆகியோரையும் துணைக்கு சேர்த்துக் கொண்டார்களாம்
சரோஜா நேற்று முன்தினம் பகலில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது சரோஜா வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மட்டும் நைசாக கொள்ளையடித்துக் கொண்டு வேலைக்கார பெண்களான புவனேஸ்வரி, ராஜா மணி மற்றும் அவர்களுக்கு துணையாக செயல்பட்ட ராஜேஷ்குமார், மனோகரன் ஆகியோர் தப்பி சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து சரோஜா திருவான்மியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையில் ஈடுபட்ட ராஜா மணி, புவனேஸ்வரி, ராஜேஷ்குமார், மானோகரன் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகையை மீட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications