ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ரமண சரஸ்வதி, எம்.பிரதாப், ஸ்ரேயா பி. சிங், சித்ரா விஜயன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறை மாற்றமும், 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கி தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு ஊரக புத்தாக்க தலைமை செயல் அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட அதிகாரியாக பொறுப்பில் இருந்து வந்தார்.
ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர்.
எம்.பிரதாப் ஐ.ஏ.எஸ், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் துணைச் செயலாளர் பொறுப்புடன் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக ஏற்று செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேயா பி சிங் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்புடன் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications