ஆஹா காரணமே வேறயாமே.. கைக்கு வந்த ரிப்போர்ட்.. அமைச்சர்களை அழைத்த முதல்வர்.. ஸ்டாலினின் 4 டார்கெட்ஸ்!
சென்னை: ஆகஸ்ட் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான சில ஆலோசனைகள் செய்யப்பட உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் தற்போது கொங்கு மண்டல பயணத்தில் பிசியாக இருக்கிறார். கோவைக்கு இன்று சென்றுள்ள அவர்.. மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அதன்பின் நாளை திருப்பூர் சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மறுநாள் ஈரோடு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்கிறார்கள்.
இடையில் சிறு, குறு தொழில் நிறுவன ஓனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை செய்கிறார். இதெல்லாம் முடிந்து வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் சென்னைக்கு முதல்வர் ஸ்டாலின் வர உள்ளார்.

என்ன நடக்கும்
அதன்பின் இரண்டு நாட்கள் ஆட்சி ரீதியாக சில நிர்வாக பணிகளை கவனிக்கும் முதல்வர் ஸ்டாலின்.. 30ம் தேதி அமைச்சர்களை சந்திக்க உள்ளார். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கான அழைப்பு நேற்று இரவு விடுக்கப்பட்டது. தமிழ்நாடு அமைச்சர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோட்டை வட்டாரத்தில் விசாரித்ததில் சில முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. 4 விஷயங்களை டார்கெட்டாக வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தை கூட்ட இருக்கிறார்.

டார்கெட் 1
முதல் காரணம் முதல்வர் ஸ்டாலின் கைக்கு சென்று இருக்கும் பர்பார்மன்ஸ் ரிப்போர்ட். பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டை வைத்து அமைச்சர்களின் நிறை, குறைகளை முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கு டோஸ் விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டார்கெட் 2
பொதுவாக சில பிரச்சனைகள் பற்றி ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளனர். பரந்தூர் விமான நிலையம், மற்ற பல மாவட்டங்களில் பேருந்து நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். முக்கியமாக சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றியும், நிதி நிலைமை ரீதியாக இதில் ஆலோசனை செய்ய உள்ளனர். தமிழ்நாட்டின் நிதி நிலைமை தற்போது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி பேச உள்ளனர்.

டார்கெட் 3
இதில் அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சுக்கள் இருக்காது. அமைச்சரவை மாற்றத்திற்கு இப்போது வாய்ப்பே இல்லை என்று செய்திகள் வருகின்றன. ஆனாலும் சில அமைச்சர்களுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். அவசரமாக அமைச்சர்கள் சிலர் எடுத்த முடிவுகளால் வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்படும். அதோடு அமைச்சர்கள் தரப்பு கோரிக்கைகள், அவர்களின் குறைகள் பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.

டார்கெட் 4
இது போக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளது. சில துறைகளில் இன்னமும் அமைச்சர்கள் - ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் நிற்கவில்லை. இதை பற்றி ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் முதல்வர் பெரும்பாலும் அமைச்சர்கள். ஆனால் இந்த முறை அதை பற்றி கேட்பார் என்று கூறப்படுகிறது.
இதெல்லாம் போக வட மாநிலங்களில் பாஜக அல்லாத அரசுகளில் அமைச்சர்கள் மத்திய விசாரணை ஆணையங்களால் குறி வைக்கப்படுவது பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications