இரும்பு தகடுகளுடன் லாரி கடத்தல்.. பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை: கர்நாடகாவில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 29 டன் இரும்பு தகடுகளை லாரியில் கடத்தி வந்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேரை, சென்னை மணலி அருகே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
சென்னையில் அண்ணா சாலையை சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவர். கர்நாடக மாநிலத்தில் இருந்து, சென்னை மணலி பகுதியில் உள்ள தனியார் இரும்பு ஆலை ஒன்றுக்கு, கடந்த மாதம் 16ம் தேதி, ரூ.35 லட்சம் மதிப்பிலான 29 டன் இரும்பு தகடு லாரியில் அனுப்பி வைத்துள்ளார்.

29 டன் எடையுள்ள இரும்பு தகடுகளை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இறக்குமாறு லாரி ஓட்டுநர் செல்வத்திடம் ரவிக்குமார் கூறியுள்ளார். ஆனால் லாரி ஓட்டுநர் செல்வம், 29 டன் இரும்பு தகடுகள் ஏற்றிவந்த லாரியுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த ரவிக்குமார், லாரி ஓட்டுநர் செல்வத்தை செல்ஃபோனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், செல்ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் ரவிக்குமார் சந்தேகம் அடைந்தார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் ரவிகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடத்தியவரை வலைவீசி தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில், லாரி ஓட்டுநர் செல்வம் மணலி அடுத்த காட்டூர் பகுதியில், லாரியை மறைத்து நிறுத்தி, 29 டன் இரும்பு தகடுகளை கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் ரவிகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடத்தியவரை வலைவீசி தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில், லாரி ஓட்டுநர் செல்வம் மணலி அடுத்த காட்டூர் பகுதியில், லாரியை மறைத்து நிறுத்தி, 29 டன் இரும்பு தகடுகளை கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து இரும்பு தகடுகள் மற்றும் லாரியை கைப்பற்றிய போலீசார், பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications