ஜெயக்குமார்..தீபக் ராஜா..சண்முகம்..ஆம்ஸ்ட்ராங்..2 மாதங்களில் 4 அரசியல் கொலைகள்! பரபரக்கும் தமிழ்நாடு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலையால் பரபரப்பில் இருக்கிறது தமிழ்நாடு. இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 அரசியல் கொலைகள் அரங்கேறி இருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தொடங்கி, தற்போது பசக ஆம்ஸ்ட்ராங் வரை தமிழகத்தை இரு மாதங்களில் அதிர வைத்த அரசியல் கொலைகள் குறித்து பார்க்கலாம்..
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன் தினம் அவரது வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசு பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்: உடலுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. சரணடைந்த பொன்னை பாலு சுரேஷின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கும் நிலையில் ஆற்காடு சுரேஷின் நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டதாகவும் தற்போது பிறந்த நாளிலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் உண்மை குற்றவாளிகளுக்கும் தற்போது சரணடைந்தவர்களுக்கும் தொடர்பில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
நெல்லை ஜெயக்குமார்: கடந்த மே 2ஆம் தேதி தனது தந்தையை காணவில்லை என நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் மே நான்காம் தேதி அவரது சொந்த ஊரில் அவரது தோட்டத்தில் வீட்டிற்கு பின்புறம் பாதி உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் உலாவின. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டி ஜெயக்குமார் கடிதம் எழுதியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அவரது மரணத்தில் எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தீபக் ராஜா: நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடியான தீபக் ராஜா காதலி கண் முன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் இன்னும் பதட்டத்தில் இருக்கும் நிலையில் 35 ஆண்டு பகை காரணமாக நடந்த கொலை சம்பவம் இது என்கின்றனர் நெல்லை பகுதி வாசிகள். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்த தீபக் ராஜா, கடந்த மே மாதம் தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றார்.
அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் நெல்லை, தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்கு பின் தீபக் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு மணி நேரம் இறுதி ஊர்வலம் நடைபெற்று பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சேலம் சண்முகம்: சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்ட அவரது உடல் கடந்த நான்காம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.
சண்முகத்தின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும் அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலையை செய்தது திமுக பிரமுகர் சதீஷ் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சண்முகத்தின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் திமுக பிரமுகர் சதீஷ் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். கஞ்சா விற்பனையில் திமுக பிரமுகர் சதீஷ் ஈடுபட்டதாகவும் அது தொடர்பாக சண்முகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் கூலிப்படை மூலம் சதீஷ் அவரை கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்!












Click it and Unblock the Notifications