அடுத்தடுத்து 4 சிக்ஸர்.. சத்தமின்றி ஸ்டாலின் சம்பவம்.. தமிழ்நாட்டிற்கே குட் நியூஸ்.. இதான் முக்கியம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 2 நாட்களில் வெளியிட்ட அறிவிப்புகளும், தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்ட சில அறிவிப்புகளும் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளன.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீடுகளை ஈர்க்கவும், இங்கே நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.

அடுத்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் 4 முக்கியமான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
அறிவிப்பு 1 - தென்கொரியாவை சேர்ந்த சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அவர்களின் கிளை நிறுவனமான கியா நிறுவனம் கடந்த முறை தமிழ்நாட்டில் ஒப்பந்தம் செய்ய இருந்தது.
ஆனால் அதை தெலுங்கானா அரசு உள்ளே புகுந்து ஒப்பந்தம் செய்தது. இதனால் கடந்த ஆட்சியில் கியா தொழிற்சாலை சென்னைக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில்தான் அவர்களின் Hyundai நிறுவனம் தற்போது சென்னையில் முதலீட்டை விரிவுபடுத்த உள்ளது.
பெரும்பாலும் வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையை Hyundai நிறுவனம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 11ம் தேதி இந்த ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதற்காக முதலீடு செய்ய உள்ளது.

அறிவிப்பு 2 - ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
சென்னையில் இவர்கள் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். ஏர் கண்டிஷனர் & கம்ப்ரசர் தொழிற்சாலை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.
அறிவிப்பு 3 - அதேபோல் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இந்த உற்பத்தி ஆலை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்றும், தொடக்கத்தில் 1,200 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு 4- இதுபோக.. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
மின் வாரிய ஊழியர்கள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனை நிர்வாம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உன்னதமான ஊதிய உயர்வினை வழங்கிய, உழைப்பாளர்களின் உற்ற தோழர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு மின் வாரிய தொழிலாளர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.., என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications