திருவிடந்தை அருகே இளைஞர் கொலை.. துப்பு துலங்கியது.. குற்றவாளி போலீஸில் பகீர் வாக்குமூலம்!
Recommended Video

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை சாலையோரத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டு வீசப்பட்ட விவகாரத்தில் போலீஸாருக்கு துப்பு துலங்கியது.
திருவிடந்தை சாலையோரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் காணப்பட்டது. இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் மாமல்லபுரம் போலீஸில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீஸார் இளைஞர் குறித்த விவரங்களை விசாரித்து வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

தலைமறைவு
தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீஸார் தேடி வந்தனர். இதில் இந்த வழக்கில் மோகன்ராஜ் (37), சிவசங்கரன் (27), மதியரசன் (24), முகிலன் (23) ஆகிய 4 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் சரணடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஜெயராமனை (28) நேற்று மாமல்லபுரத்தில் சிக்கினார்.

பரபரப்பு
இந்நிலையில் அருண் பிரகாஷை கொலை செய்தது ஏன் என்பது குறித்து ஜெயராமன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அருண்பிரகாஷின் பெரியம்மாள் மகள்தான் இந்திரா (36). இவர் கணவரை பிரிந்து புதுவையில் உள்ள ரெட்டியார்பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜுடன் இந்திராவுக்கு தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்திரா புகார்
மோகன்ராஜுக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தன் மகள்களுக்கு மோகன்ராஜ் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக ரெட்டியார்பாளையம் போலீஸார் இந்திரா புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் இந்திராவுக்கு அருண்பிரகாஷ் பக்கபலமாக இருந்து உதவிகளை செய்ததால் அவர் மீது மோகன்ராஜுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

விசாரணை
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அருண்பிரகாஷை கொலை செய்ய தனது நண்பர்களுடன் அவரை கோவளம் அருகே உள்ள சவுக்குத் தோப்புக்கு வரவழைத்தனர். அப்போது மதுஅருந்திவிட்டு போதை தலைக்கேறியதும் அருண்பிரகாஷின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டனர். நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications