வேலையை தொடங்குங்க.. 4 டாஸ்க்.. அவசரமாக அழைத்த ஸ்டாலின்.. மொத்தமாக இறங்கும் டீம்! நாளை என்ன நடக்கும்?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை நடக்க உள்ள நிலையில் இதில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்படும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் 39வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 14ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

அமைச்சரவை கூட்டம்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நாளை தமிழநாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கும் கூட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளது. அமைச்சரவை கூட்டம் நாளை நடக்க உள்ள நிலையில் இதில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்படும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாஸ்க் 1
முதல் விஷயம்.. அமைச்சர்களிடம் அவர்களின் புதிய துறை குறித்து ஆலோசனை செய்யப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள புதிய இலாக்கா குறித்து ஆலோசனை செய்யப்படும். கூடுதல் இலாக்கா வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் அதை பற்றி பேசப்படும். அதேபோல் துறை மாற்றப்பட்ட அமைச்சர்களிடம் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும். அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது தொடர்பாக இவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நாளை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறை மாற்றப்பட்டது திருப்தியா என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்க வாய்ப்பு உள்ளது.

டாஸ்க் 2
இரண்டாவது விஷயம்.. உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும். அமைச்சராக உதயநிதி பதவி ஏற்றுள்ள நிலையில், அவர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. இதில் உதயநிதியிடம் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது. மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (உதயநிதி) இணைந்து செயல்பட வேண்டும். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்ற துறை அமைச்சர்களுடன் எப்படி இணைந்து செயல்படுவார் என்பது தொடர்பாகவும் நாளை ஆலோசனை செய்யப்படுகிறது.

டாஸ்க் 3
மூன்றாவதாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள். தங்கள் மாவட்டத்திற்கு கீழ் உள்ள எம்பி தொகுதிகளில் அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. முக்கியமாக வார்டுகள் மாற்றம், உள்ளூர் அளவில் பணிகளை செய்வது, தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குவது என்பது பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

டாஸ்க் 4
2023ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனவரி 2ம் வாரத்திற்கு பின் இந்த கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் பெரும்பாலான சமயங்களில் பொங்கலுக்கு முன்பாக கூட்டத்தொடர் நடக்கும். ஆனால் இந்த முறை பொங்கலுக்கு பின்பாக கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தொடர் தொடர்பாகவும் நாளை ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications