ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் பலி..மனசாட்சி..கனத்த இதயம்.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தினால் தமிழ்நாட்டில் 41 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின் கனத்த இதயத்துடன் சட்டசபையில் நிற்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை' விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் சட்டசபை கூட்டம் தொடங்கியதும், 'தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து பேசினார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், கனத்த இதயத்துடன் சட்டசபையில் நிற்பதாக கூறினார். ஆளுநர் தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல ஆயிரம் பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிராக 25 பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று கூறி முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனசாட்சியை உறங்க வைத்து விட்டு நம்மால் ஆட்சி செய்ய முடியாது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், என் இதயத்தில் இருந்து இந்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications