Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதன்முறையாக.. தமிழ்நாட்டில் குபீர்னு மலர்ந்த "தாமரை".. என்னாது 41%? ஆசைன்னாலும் ஒரு அளவு வேணாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக கொங்குவில் வளர்ந்துள்ளதாக சர்வே ஒன்று தெரிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பார்க்கவே நம்ப முடியதா அளவு வித்தியாசமாக இருக்கிறது. ஆனாலும் பாஜகவினருக்கு பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

தமிழ்நாட்டின் மேற்குபகுதிகளான கோவை, சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதுதான் கொங்கு மண்டலம்..

41 % support for Tamil Nadu bjp in kongu region clean sweep and Surprise information released in the Coimbatore survey

இந்த கொங்கு மண்டலத்தில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி போன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகமாக இருந்து வருகிறது. அதனால், அதிமுகவின் கோட்டை என்று கொங்குவை சொல்கிறார்கள்.

கொங்கு பாஜக: ஆனால், இங்கு திமுகவும் வீறுகொண்டு எழுந்துவருகிறது.. பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது.. அந்தவகையில், கொங்குவை, இந்தமுறை அளவுக்கு அதிகமாகவே டார்கெட்டு செய்து பாஜக காய்நகர்த்தி வருகிறது.

இதில், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில், வேட்பாளர்களையும் பாஜக கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.. இந்த பகுதிகளில் எல்லாம் செல்வாக்கு உள்ளதுடன், கடந்த 2 வருட காலமாகவே களப்பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது பாஜக.. எப்படியும் இந்த முறை தேர்தலில் வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்துவதுடன், கொங்கு மண்டலத்திலிருந்து மட்டும், 2 மத்திய அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்றும் பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

கோவை: இப்படிப்பட்ட சூழலில், கொங்கு பாஜகவுக்கு பூஸ்ட் தரும்வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.. வருகிற தேர்தலில் கோவை தொகுதி யாருக்கு சாதகமாக இருக் கும் என்று "நியூஸ் கிளவுட்" என்ற தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது.. இந்த கருத்துக்கணிப்பில், பாஜகவின் அசுர வளர்ச்சிக்கு காரணங்கள் என்ன என்பது போல அதில் லிஸ்ட் போட்டு தரப்பட்டுள்ளது. இதோ ஒருசில தகவல்கள்:

"பல்வேறு சாதியினரிடேயும் மொத்தமாக சேர்த்து 1596 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளி பாஜக 663 வாக்குகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 593, அதிமுக கூட்டணி 194, நாம் தமிழர் கட்சி 89 வாக்குகளை பெற்றுள்ளது. மற்றவை என 57 பேர் வாக்களித்துள்ளனர்.

அபார வளர்ச்சி: பாஜக அபாரமாக இங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவர் அண்ணாமலையின் போராட்ட குணம், நேர்மை, பண்பு, அவரின் தலைமையில் பாஜக உள்ளது ஒரு காரணமாக உள்ளது. திமுக தரப்பில் செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினரின் ஊழல், கறைபடிந்த கைகள், அடாவடிதனம், ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, வசூல் வேட்டை போன்றவையும் இன்னொரு காரணமாக உள்ளது,.

1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளை விடுதலை செய்வோம் என்று திமுக, விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசி வருவதும் கோவை பகுதி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உள்ளாக்கியிருக்கிறது. சிறுபான்மை மக்களின் வாக்குக்காக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்கள் ஆவேசத்தில் உள்ளனர்.

அதிமுக: அதே நேரத்தில் அதிமுகவினரும் திமுகவிற்கு சளைத்தவர்கள் கிடையாது என்பது போல் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பேசி வருவதும் கோவை பகுதியில் அதிமுக செல்வாக்கு சரிவிற்கு மிகமுக்கிய காரணமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கோவை மாநகராட்சி வரி பன்மடங்கு உயர்வு, பத்திர பதிவு வரி உயர்வு, மானியங்கள் குறைப்பு, அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை திமுக முடக்கியது போன்றவையும் திமுகவுக்கு பாதகமாக பேசப்படுகிறது.
அண்ணாமலை: இதைத்தொடர்ந்து அண்ணாமலையும் திமுகவின் ஊழல் பட்டியல்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது பொதுமக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு நீள்கிறது. இது கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் வாக்குகளை பெற்று தந்துள்ளது.

அண்ணாமலையின் நடைபயணத்தை மேற்கொண்டதும் கோவை மக்களின் மனதில் பாஜகவின் தாக்கத்தை அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது. மேலும், கேரளா கம்யூனிஸ்ட் அரசு கோவைக்கு தர வேண்டிய சிறுவாணி ஆற்று தண்ணீரை தர மறுப்பதும், அதை கோவை கம்யூனிஸ்ட் எம்.பி. கேட்க மறுத்து அமைதி காப்பதும், திமுக கூட்டணியான கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது.

ரயில்கள்: கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானம் ஏற்படுத்தியது, கோவை-சென்னை, கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு கொடுத்தது, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையை மருத்துவ கல்லூரியாக மத்திய அரசு தரம் உயர்த்தியது, போன்றவை அனைத்துமே, கோவையை மையப்படுத்தி மத்திய பாஜக அரசு திட்டங்களை அறிவித்தது, அம்மாவட்ட மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு உயர காரணமாகும்" என்றெல்லாம் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளாம்.

மேற்கண்ட கருத்து கணிப்பினை ஒருசில செய்தி நிறுவனங்கள் மட்டுமே வெளியிட்டுள்ள நிலையில், இதன் உண்மை தன்மை தெரியவில்லை.. அதேசமயம், இது ஒரு கருத்து கணிப்பு மட்டுமே என்பதால், எந்தவிதமான தாக்கத்தையும் இது அரசியல் களத்தில் பெரிதாக ஏற்படுத்தப்போவதுமில்லை.

கொங்குவை இந்த முறை வெல்ல போவது திமுகவா? அதிமுகவா? பாஜகவா? என்ற எதிர்பார்ப்பு மட்டும் எகிறி வருகிறது என்றாலும், தேர்தல் முடிவு மட்டுமே, எந்தவொரு வெற்றியையும் இறுதி செய்யும் என்பதை மறந்துவிடக்கூடாது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+