சென்னைவாசிகளே.. இன்று 14, நாளை 44 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து.. எந்த ட்ரெயின் செக்பண்ணுங்க
சென்னை: சென்னை, சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் இன்று சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணி வரையில் 14 மின்சார ரயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்து பயணத்தை விட புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் புறநகர் மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று சனிக்கிழமை 14 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மூர்மார்க்கெட்டிலிருந்து இன்று இரவு 10.35 மணிக்கு பட்டாபிராம் புறப்படும் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து இரவு 11.30, 11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டிலிருந்து நாளை காலை 4.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு 5.30 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு 5.40 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 44 மின்சார ரெயில்களின் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், தாம்பரம்-கடற்கரை இடையிலான சேவை காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரையும், செங்கல்பட்டு-கடற்கரை இடையிலான ரயில் சேவை காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11 மணி, 11.50, மதியம் 12.30, 12.50, 1 மணி, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மறு மார்க்கமாக காலை 9.40, 10.20, 10.55, 11.30, மதியம் 12 மணி, 12.20, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications