Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிரட்டறாங்களா" எடப்பாடியை.. மடியில் ₹4500 கோடி கனம் ஆச்சே.. ஒரு வகைதொகை வேணாமா: மருது அழகுராஜ் நறுக்

மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மூத்த சகோதரர் போல் உரிமையுடன், அக்கறையுடன் எத்தனையோ விஷயங்களை எடப்பாடியிடம் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டார்.. ஆனால் எதற்குமே எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்கவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.. அத்துடன் எடப்பாடி பழனிசாமி மிரட்டப்படுகிறாரா? என்ற கேள்விக்கும் மருது அழகுராஜ் பதிலளித்துள்ளார்.

ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளும் சிக்னல்களும் தொடர்ந்து எடப்பாடிக்கு தரப்பட்டு வந்தது.. மறைமுக அழுத்தங்களும், சிக்னல்களும் தரப்பட்ட நிலையில், அதை கடைசிவரை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டார்.

நெடுஞ்சாலை துறை ஊழல், சம்பந்தி ஊழல் விவகாரம், கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வரும்நிலையில், பாஜக எதிர்ப்பு அரசியலையும் அவர் கையில் எடுத்துள்ளதாக சலசலக்கப்படுகிறது.. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நம்மிடம் பல விஷயங்களை மருது அழகுராஜ் பகிர்ந்து கொண்டார். அதன் சுருக்கம்தான் இவை:

பாண்டித்துரை

பாண்டித்துரை

இதையடுத்து, பாஜகவின் உத்தரவுக்கு எடப்பாடி பழனிசாமி பணிவாரா? ஓபிஎஸ்ஸை ஏற்பாரா? அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்விகள் வட்டமடிக்கின்றன... கடந்த 2 வாரங்களாகவே, எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்து வருகிறது மேலிடம்.. அதன் முதல்அஸ்திரம்தான் புதுக்கோட்டை பாண்டித்துரை ரெய்டு விவகாரமாம்.. பாண்டித்துரை இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஆவணங்கள் அவரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது..

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமியின் இணக்கமான உறவை, பாஜக மேலிட தலைவர்கள் இருவருமே எதிர்பார்க்கிறார்கள்.. தேசிய அரசியலில், இந்திரா காந்தியின் இலகுவான அரசியலை எதிர்பார்த்து, திமுக ஆதரித்த இடைத்தேர்தல் வேட்பாளரை, எம்ஜிஆரும் ஆதரித்து, அதன்மூலமாக இந்திராவை தன்வசப்படுத்த கையாண்ட அரசியலும் உண்டு.. ஜெயலலிதாவின் அரசியலையும் பார்த்தால், ராஜீவ் காந்தியை சார்ந்து, பிறகு நரசிம்மாராவை சார்ந்துதான் இருந்தார்.. ஒரு ஆளுமை நிறைந்த அடையாளத்தை தான் பெறுகிறவரை, ஒரு இணக்கமான அரசியலை கையாள்வது, பிராந்திய கட்சி தலைவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு யுக்தியாகும்.

 பிணக்கு + இணக்கு

பிணக்கு + இணக்கு

அப்படித்தான் இந்த விவகாரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.. தனிப்பட்ட விஷயத்துக்காக அங்கே போய் நிற்கவில்லை.. வரக்கூடிய 2024 எம்பி தேர்தல் மட்டுமே இதற்கு காரணம்.. அதிமுக பிணக்கு என்பது தற்போது பேசப்பட்டு வருவதால், இணக்கு பற்றின தேவை எழுந்துள்ளது.. ஒன்றுபட்டால் மட்டுமே அனைத்தும் சாத்தியம் என்ற கருத்து தொண்டர்களிடம் மேலோங்கி நிற்கிறது. அந்த கருத்தைதான் ஓபிஎஸ் வலியுறுத்துகிறார்.

ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்தை எம்பி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும என்று எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு கடிதம் எழுதினார்.. ஆனால் இன்றுவரை ரவீந்திரநாத் எம்பியாகவே தொடர்கிறார்.. சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தருமருக்கு கமிட்டியில் பொறுப்பும் தரப்பட்டுள்ளது.. அந்தவகையில், ஓபிஎஸ் அங்கீரிக்கப்பட்ட தலைவராகவே பாஜக கருதுகிறது.. கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற ஓபிஎஸ் கருத்தில் நியாயம் உள்ளது என்பதையும் பாஜக உணர்ந்துள்ளது.. பாஜகவை வைத்து எடப்பாடியை, ஓபிஎஸ் மிரட்டுவதாக சொல்கிறார்கள்.. அப்படி கிடையாது.. ஒற்றுமைக்கு பாஜக முயற்சிக்கிறது.. அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோமே தவிர, இதில் மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது.

 மடியில் கனம்

மடியில் கனம்

மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? எடப்பாடிக்கு வேண்டுமானால் பயம் இருக்கலாம்.. அவரை சுற்றி ஏகப்பட்ட விவகாரங்களில் அலை அடிக்கிறது.. எடப்பாடி ஆட்சி காலத்தில், 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்தது மத்திய அரசு.. பெருமளவு நிதி தந்தது மத்திய அரசு.. ஆனால் அதிலும் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக, அதற்கு முகாந்திரம் இருப்பதாக திமுக அரசு சொல்கிறது.. ஏற்கனவே சிபிஐக்கு நகர்த்தி கொண்டுபோகப்பட்ட வழக்கு 4500 கோடி ரூபாய், எடப்பாடியின் சம்பந்தி மீதான வழக்கு.. இதுமாதிரி கொரோனா தொடங்கி கொடநாடுவரை ஏகப்பட்ட கொள்ளையடித்த விவகாரங்கள், ஆட்சி அதிகாரத்தில் இருந்து முறைகேடுகள் செய்த விவகாரங்கள் இப்படி நிறைய உள்ளன.

 அண்ணன் ஓபிஎஸ்

அண்ணன் ஓபிஎஸ்

வகைதொகை இல்லாமல் சம்பாதித்தாகிவிட்டதால், எடப்பாடி தரப்புக்குதான் அச்சுறுத்தல்கள் அதிகம். அன்றைக்கு துணை முதல்வராக இருந்தபோது ஓபிஎஸ் உள் அரங்கத்திலேயே பேசினார்.. அதுவும் ஒரு மூத்த சகோதரர் போல் உரிமையுடன், அக்கறையுடன் சில விஷயங்களை ஓபிஎஸ் எடப்பாடியிடம் கேட்டுக் கொண்டார்.. இதை நான் கண்ணெதிரிலேயே நேரிலேயே பார்த்தேன்.. ஓபிஎஸ் அன்று பேசியது என்ன தெரியுமா?

 அம்மா அம்மா

அம்மா அம்மா

"ஊழல்கள் தடுக்கப்பட வேண்டும், தறிகெட்டு ஓடுகிறது நிர்வாகம், தவறுகள் அதிகமாக இருக்கிறது, தொண்டர்களை கவனிக்காமல், டெண்டர்களை முன்னிறுத்துகிறீர்கள், கான்ட்ராக்டர்களுக்கு மட்டுமே கதவை திறக்கிறீர்கள், ஊழல் செய்யாதீர்கள், அடக்கமாக நடந்து கொள்ளுங்கள், தொண்டர்களை அனுசரித்து போங்கள், அம்மா இன்னைக்கு இல்லை, அம்மா நம்பி ஒப்படைத்துவிட்டு போன ஆட்சி என்பது உங்களுக்கோ எனக்கோ மட்டும் இல்லை, தொண்டர்கள் அம்மாவுக்கு தந்த அங்கீகாரத்தால்தான், நம்மை உட்காரவைத்துள்ளனர், நீண்ட காலத்துக்கு கட்சியை கொண்டு செல்ல வேண்டும், அதற்கு இலகுவான அரவணைப்பு அரசியல் தேவை, வழிகாட்டு குழு அமைப்போம், அந்த குழுவில் பலருக்கும் வாய்ப்பு தாருங்கள் என்று வெளிப்படையாகவே ஓபிஎஸ் எடப்பாடியிடம் கேட்டார்.. ஒன்றையுமே அவர் காதில் வாங்கவில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+