4800 கோடியாமே.. "சாயும்" எடப்பாடி பழனிசாமி.. தாங்கி பிடிக்கும் திமுக.. ஆஹா.. தினகரனும் சொல்லிட்டாரே
எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் நெருக்கமாகி வருவதாக டிடிவி தினகரன் சொல்கிறார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் நெருக்கமாகி வருவதாக, அமமுக, ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.
"இன்றைக்கு இருக்கிற முன்னாள் அமைச்சர்களுக்கெல்லாம் ஓபிஎஸ்ஸை பிடிக்கவில்லை.. காரணம், திமுக அட்டூழியத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார் என்பதால்தான்.. என்ன வேணாம்னாலும் செய்து கொள்ளுங்கள்.. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளுங்கள்.. லாபம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார்.

சம்மந்தி
எடப்பாடி பழனிசாமிக்கு நிறைய பிரச்சனை இருக்கிறது.. ஒருபக்கம் கொடநாடு விவகாரம், இன்னொரு பக்கம் 4800 கோடி ரூபாய் சம்மந்திக்கு கொடுக்கப்பட்ட வழக்கு, என ஏகப்பட்ட பிரச்சனை அவருக்கு இருக்கிறது. இந்த வழக்கு இப்போது தமிழக அரசிடமே வந்துள்ளது.. அதுவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்துவிட்டது.. இப்போது எடப்பாடியின் வழக்கு முதல்வர் ஸ்டாலினின் கையில் உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணையத்தின் அறிக்கை என பல விவகாரங்களில் சிக்கி உள்ளதால் திமுகவை அனுசரித்து போவதாக சொல்கிறார்கள்.

4800 கோடி ரூபாய்
மற்றொருபுறம் சசிகலாவும், இதே கருத்தை வேறு மாதிரியாக சொல்லி வருகிறார்.. திமுகவை எதிர்த்து அரசியல் செய்வது தான் மட்டுமே என்றும், நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.. அதிமுக பிளவுக்கு பின்னணியில் திமுக இருக்கிறது" என்று கூறி வருகிறார். இதுபோலவே கேசி பழனிசாமியும் சொல்லி வருகிறார்.. அதிமுகவை எவ்வளவு பிளவு படுத்த முடியுமோ அவ்வளவு பிளவுபடுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. இதனால் திமுகவுக்கு மறைமுக உதவிகளை செய்துவருகிறார் என்று குற்றஞ்சாட்டி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
வழக்கமாக, திமுகவுக்கு ஓபிஎஸ்தான் ஆதரவாக இருந்து வருகிறார் என்ற நிலைமையை மாற்றி, எடப்பாடியை முன்னிறுத்தி சமீபகால விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.. ஆனால், இதனால் எடப்பாடிக்கோ, திமுகவுக்கோ பலன் கிடைத்திருக்கிறதா? இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா? என தெரியவில்லை.. இத்தனை காலமும் திமுகவை தனியாகவும், எடப்பாடி பழனிசாமியை தனியாகவும், விமர்சித்து வந்த தினகரன்கூட, தற்போது, இருவரையும் ஒப்பிட ஆரம்பித்துவிட்டார். நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் டிடிவி பேசியதாவது:

கருணாநிதி
"எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டி முதலமைச்சர் ஸ்டாலினையே பொதுச் செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன், திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மாவிற்கு துரோகம் செய்துள்ளனர். 1988 ஆம் ஆண்டு என் 26 வயதிலேயே முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்கொண்டேன். இந்த எடப்பாடியெல்லாம் எம்மாந்திரம். எடப்பாடி பழனிசாமி மேலும் மேலும் துரோகமிழைக்கிறார்.

சப்போர்ட்
வேலுமணி, தங்கமணியெல்லாம் இப்போ NO மணியாகிவிட்டன" என்று கூறியுள்ளார்.. அதேசமயம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தவறை உணர்ந்து விட்டார் என்று மறக்காமல் சப்போர்ட்டையும் செய்துள்ளார். எடப்பாடியின் கை ஓங்க ஓங்க, திமுகவுடன் ஒப்பிட்டு வருவது தவிர்க்க முடியாததாக சென்று கொண்டிருக்கிறது.. மற்றொருபுறம் ஓபிஎஸ்ஸை திமுகவுடன் ஒப்பிட்டு வந்ததும் மெல்ல மாற துவங்கிவிட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications