இன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் மட்டுமே சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 489 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை அறிவித்துள்ளது. அதேபோல, 494 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாநில முழுவதும் 3,990 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

489 tested positive for Corona and two died today in Tamilnadu

தமிழ்நாட்டில் தற்போது வரை 8,52,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிகிச்சை பலனிற்றி சென்னையை சேர்ந்த ஒருவரும் செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஒரு காலத்தில் கொரோனா உச்சத்திலிருந்து தலைநகர் சென்னையில் இன்று 184 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் 170 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 பேருக்கும் கோவையில் 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 50,783 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 1,76,30,655 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+