Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 + 15 = 20.. அந்த தோட்டா எங்கே? சிக்கிய இந்து முன்னணி "ரவி".. கொந்தளிக்கும் எஸ்டிபிஐ முபாரக்.. நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இதுபோன்ற ஆயுதங்களை இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தியும், பதுக்கியும் வருகின்றார்களா என்று, எஸ்டிபிஐ தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது.

கோவை இந்து முன்னணி நிர்வாகியிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா? என தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்திற்கு பிறகு, தமிழக போலீசார் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள்.. அந்தவகையில், போலீசாரின் பிடியில் ரவி என்பவரும் சிக்கி உள்ளார்..

 திடீர் ரெய்டு

திடீர் ரெய்டு

இந்து முன்னணி கோவை மாவட்ட துணைத்தலைவராக இருப்பவர் அயோத்தி ரவி. கோவை புலியகுளம் போலீஸ் ஸ்டேஷன் அருகே இவரது வீடு உள்ளது.. இந்த வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுமே, காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் போலீசார் அயோத்தி ரவி வீட்டில் அதிரடியாக சோதனை நடத்த உள்ளே நுழைந்தனர்.. அப்போது ரவி வீட்டில்தான் இருந்திருக்கிறார்... வீட்டின் அனைத்து பகுதிகளிலுமே சோதனைகள் ஆரம்பமாகின.. இறுதியில், 2 பிஸ்டல் ரக கைத் துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்...

 அயோத்தி ரவி

அயோத்தி ரவி

பின்னர் ரவியை போத்தனூர் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணையை மேற்கொண்டனர். துப்பாக்கிகள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யார் தந்தது? யாருக்கு தொடர்பு? என்றெல்லாம் விசாரணை நடந்தது.. இறுதியில் ரவி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரவி மீது நிறைய கேஸ்கள் நிலுவையில் உள்ளன.. அவரிடம் 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.. அவைகளில் தலா 10 தோட்டாக்கள் என்று 20 தோட்டாக்கள் இருந்திருக்க வேண்டும்.. ஆனால், 5 தோட்டாக்கள் மட்டுமே இருந்ததாம்.. அதனால், மீதுமுள்ள 15 தோட்டாக்கள் எங்கே? அவற்றை அவர் பயன்படுத்தினாரா? என்றும் விசாரணை நடந்தது.. 5 + 15 = 20.. அந்த தோட்டா எங்கே? சிக்கிய இந்து முன்னணி "ரவி".. கொந்தளிக்கும் எஸ்டிபிஐ முபாரக்.. நறுக்

SDPI

SDPI

இந்த துப்பாக்கிகளை, தன்னுடைய நண்பர்கள் மூலம் சென்னையில் வாங்கியதாக போலீசாரிடம் சொல்லியுள்ளார் ரவி.. இதையடுத்து, ரவி மீது ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.. இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இந்நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இதுபோன்ற ஆயுதங்களை இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தியும், பதுக்கியும் வருகின்றார்களா என்று, எஸ்டிபிஐ தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது.

 காலில் குண்டு

காலில் குண்டு

இது தொடர்பாக எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "கோவை புலியகுளத்தில் உள்ள இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் இருந்து 2 துப்பாகிகளும், 5 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 23ம் தேதி அயோத்தி ரவியின் மகளின் பிறந்தநாள் விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கியை கையாண்டபோது அதில் கலந்துகொண்ட தீபக் என்பவரின் காலில் துப்பாக்கி குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 20 தோட்டாக்கள்

20 தோட்டாக்கள்

அந்த ரகசியத் தகவல் மூலமாகவே காவல்துறை விசாரணை நடத்தி, அயோத்தி ரவியின் வீட்டில் தேடுதல் வேட்டை மூலம் துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் கண்டறிந்துள்ளதாகவும், மற்றொரு செய்தியில் வாகன சோதனையின் போது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கண்டறிந்து மேற்கொண்ட விசாரணையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 20 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கிகளில் தற்போது 5 தோட்டாக்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 15 தோட்டாக்களின் பயன்பாடுகள் குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 15 எங்கே

15 எங்கே

காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதற்கு முன்னரும் தமிழகத்தில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெட்ரோல் குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள், நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது கோவை புலியகுளத்தில் உள்ள காவல் நிலையம் அருகே இருக்கும் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இதுபோன்ற ஆயுதங்களை இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தியும், பதுக்கியும் வருகின்றார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.

 சூழும் சிக்கல்

சூழும் சிக்கல்

ஆகவே, தமிழகத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் இத்தகைய தீய சக்திகளின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறிந்து, அதன் பின்னால் உள்ள சதிகளை தமிழக அரசும், காவல்துறையும் முறியடிக்க வேண்டும்" என்று நெல்லை முபாரக் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது, கைதான அயோத்தி ரவி கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.. அயோத்தி ரவி மீது உள்ள வழக்குகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் கஞ்சா கடத்தல், அடி-தடி மோதல் உள்ளிட்ட 10-க்கும் மேலான குற்ற வழக்குகளும், அரசியல் போராட்டங்கள் தொடர்பாக 10-க்கும் மேலான வழக்குகளும் உள்ளன. கோவையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்து இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+