நாடு முழுக்க 5 புதிய அணு உலை.. நிர்மலா சீதாராமன் சொன்னதும்.. மேஜையை தட்டிய மோடி.. முக்கிய அறிவிப்பு
சென்னை: 2047க்குள் 10 ஜிகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்யும் 5 உலைகளை உருவாக்குவோம், அணுசக்தி சட்டத்தில் இதற்கு தேவையான திருத்தங்கள் செய்யப்படும், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5 சிறிய அணுஉலைகள் 2033க்குள் செயல்படத் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இன்று மத்திய பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்படும். பீகாரில் புதிய விமான நிலையம் அமைக்கபடும், பாட்னா விமான நிலையம் விரிவு செய்யப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது
வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். விவசாயிகளுக்கான 'கிசான் கிரெடிட் கார்டு' உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்.
இளைஞர்கள் முன்னேற்றம், விவசாயம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிப்பு; வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிம வளம், நிதி மேலாண்மை, மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைப்பு செய்யப்படும்.
ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தன் தன்யா கிருஷி என்கிற திட்டம் அறிவிக்கப்படுகிறது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. 2047க்குள் 10 ஜிகாவாட் அணுசக்தி உலைகளை உருவாக்குவோம்,. அணுசக்தி சட்டத்தில் இதற்கு தேவையான திருத்தங்கள் செய்யப்படும், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5 சிறிய அணுஉலைகள் 2033க்குள் செயல்படத் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அணு உலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது பிரதமர் மோடி மேஜையை தட்டி பாராட்டுகளை தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications