"5 ராஜாக்கள்".. செதில் செதிலா உடையும் கணக்கு.. எடப்பாடியா இப்படி? கையை பிசையும் மேலிடம்.. பரபர யூகம்
பிரிந்து சென்றவர்களை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒன்றிணைக்க போகிறார் என்கிறார்கள்
சென்னை: ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும்நிலையில், மேலிடம் அளவுக்கு அதிகமாகவே குழம்பி போயுள்ளதாம்.. அதேசமயம், எம்பி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி என்ன தான் செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.
எப்படித்தான் எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்வது? எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவது என்பது தெரியாமல் மண்டை காய்ந்து போயுள்ளதாம்.
காரணம், எடப்பாடிக்கு டெல்லி மேலிடம் ஒரு கொக்கியை போட்டால், அதை பிடுங்கி வீசிவிட்டு, இன்னொரு செக்கை எடப்பாடியே வைக்கிறாராம்.. சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் மணி நம் ஒன் இந்தியா சேனலுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், பாஜக + எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குறித்து தன்னுடைய கருத்துக்களையும் சொல்லி இருந்தார்..

சண்முகம்
அதில், "பாஜகவின் பிளான் இதுதான்.. எடப்பாடியின் அரசியல் பாஜகவுக்கு பிடிக்கவில்லை.. ஒன்றுபட்ட அதிமுகவையே விரும்புகிறார்கள். அதிமுக பெயரை டேமேஜ் செய்து கொண்டே, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும்.. மோடிதான் அதிமுகவின் ஒரே தலைவராக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.. அதனால்தான், எடப்பாடியை தாங்கி நிற்கக்கூடிய 5 அமைச்சர்களை பாஜக டார்கெட் செய்கிறது.. அதில் முதல் நபர்தான் விஜயபாஸ்கர்.. அடுத்து வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், முனுசாமி இனிமேல் லிஸ்ட்டில் வருவார்கள்.. ஆனால், இந்த 5 பேரையும் வளைக்க காரணம், எடப்பாடி பழனிசாமிதான் டார்கெட் என்பதை மறந்துவிடக்கூடாது" என்று கூறியிருந்தார்.

5 ஸ்டார்கள்
பத்திரிகையாளர் மணி சொல்வதுபோல, எடப்பாடியின் ஆதரவாளர்களுக்கு பாஜக செக் வைக்க முயலலாம் அல்லது இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமிக்கு தராமல் போகலாம் என்றே பல அரசியல் விமர்சகர்களும் தங்கள் அனுமானங்களை சொல்லி வருகிறார்கள்.. அப்படி 5 ஆதரவாளர்களுக்கு பாஜக மேலிடம் குறி வைத்தாலும்கூட, அல்லது ஆதரவாளர்களே, மனமுவந்து பாஜக பக்கம் தாவினாலும்கூட, அதையும் எதிர்கொள்ள எடப்பாடி ரெடியாகிவிட்டாராம்.. 4 நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் மூத்த தலைவர் தம்பிதுரை பேசும்போது, "நாற்பதும் நமக்கே" என்ற ஜெயலலிதாவின் கனவை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று சொன்னதும் அதற்கான அச்சாரம்தான் என்கிறார்கள்.

மதில் மேல் பூனை
அதுமட்டுமல்ல, பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக மாட்டார் என்பது ஆணித்தரமாக நம்பப்பட்டாலும்கூட, ஒருவேளை பாஜகவே தனியாக கழன்று சென்றால், அதைப்பற்றி எடப்பாடி கவலைப்படாமல், ஒதுங்கிவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.. அந்தவகையில் அதிமுக - பாஜக கூட்டணியின் நிலை என்ன என்பது இந்த நிமிடம் வரை மதில் மேல் பூனையாகவே உள்ளதாக தெரிகிறது.. தனித்தே களமிறங்கினாலும்கூட, அதற்கும் தன்னை தயார்படுத்தி வருகிறாராம் எடப்பாடி..
அதற்காகவே, மூத்த தலைவர் கேசி பழனிசாமியை மீண்டும் இணைத்து கொள்ளலாமா? அன்வர்ராஜா, தம்பிதுரை போன்ற சீனியர்களையும் ஒன்றிணைத்து கொண்டு, தன் தரப்பிலான கட்சியை பலப்படுத்தலாமா? என்ற யோசனையையும் எடப்பாடி கையில் எடுத்துள்ளாராம்.

பஞ்ச் பஞ்ச்
இதற்கு நடுவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு பேட்டி தந்துள்ளார்.. "தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சிதான்.. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, எம்பி தேர்தலில் பாஜக வெற்றி பெறும்" என்று ஒரு பஞ்ச் வைத்துள்ளது பாஜகவை மேலும் கடுப்பாக்கி வருகிறது என்கிறார்கள்.. அதிமுக தலைமையில்தான் கூட்டணி இங்கு அமையும், உங்களுக்கு வெற்றி வேண்டுமானால், நீங்கள் வந்து அதிமுகவுடன் இணைந்து கொள்ளுங்கள் என்ற ரீதியில் செல்லூரார் பேசியுள்ளது, கிட்டத்தட்ட பாஜகவை டேமேஜ் செய்வதுபோலவே உள்ளதாக மேலிடம் நினைக்கிறதாம்.

ஹேஸ்யங்கள்
ஏற்கனவே பாஜகவுக்கு எதிரான கூட்டணி மனப்பான்மையில் சிவி சண்முகம், முனுசாமி போன்றோர் ஆர்வம் காட்டி வரும்நிலையில், அந்த லிஸ்ட்டில் தம்பிதுரை, செல்லூர் ராஜ், போன்றோரும் அடுத்தடுத்து இணைந்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கான பலம் பெருகி வருவதையே காட்டுகிறதாம்.. எனினும், ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை பிரதானமாக தீர்மானிக்கக்கூடிய பாமகவை, எந்த காரணத்தை கொண்டும் எடப்பாடி பழனிசாமி கைவிட்டுவிடக்கூடாது என்றும் நலம்விரும்பிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.. ஒருவேளை விசிகவை சமாதானப்படுத்தி, பாமகவை கூட்டணிக்குள் ஸ்டாலின் கொண்டுவந்துவிட்டால், அதனால் பாதிக்கப்பட போவது பாஜகவை விட, எடப்பாடியாகத்தான் இருக்கும் என்பதையும் அந்த நலம்விரும்பிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications