நிலைமை சரியில்லை.. 5 அணு ஆயுத நாடுகள் நடத்தும் அவசர மீட்டிங்.. என்ன நடக்க போகுதோ? பின்னணி
சென்னை: ஐந்து அணு ஆயுத நாடுகளின் கூட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நியூயார்க்கில் நடைபெற உள்ளது என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோ தெரிவித்துள்ளார். இந்த குழுவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன. அனைத்து அணு ஆயுத நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் இந்த 5 நாடுகளும் சந்திப்பை நடத்த உள்ளன.
ஒரு குறிப்பிட்ட தேதி அல்லது கலந்துகொள்ளும் அதிகாரிகள் பற்றிய விவரங்களை ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோ இன்னும் வழங்கவில்லை.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிற்கும் மேற்குலகிற்கும் இடையே அணுசக்தி பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன, அதேபோல் தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே அணு ஆயுத ஆபத்து இருக்கும் என்ற பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
கடந்த மாதம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்யாவின் ரஷ்ய நாட்டின் அணுசக்தி கோட்பாட்டில் மாற்றங்களை அறிவித்தார். இது உலக அளவில் கவனம் பெற்றது. ரஷ்யா அணு ஆயுத போருக்கு எதிர்காலத்தில் தயாராகும் விதமாக இப்படி செய்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியது.
அணு ஆயுத போர்: ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த செய்திகள் காரணமாக.. இஸ்ரேல் தனது தாக்குதல் திட்டத்தை மாற்றும் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஈரான் அணு ஆயுத சோதனை செய்ததாக வெளியாகும் தகவல்களால் கடுமையான விவாதங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன.
கடந்த அக்டோபர் 5 அன்று மாலை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளிலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், செம்னான் மாகாணத்தில் உள்ள அராடன் என்ற இடத்தில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி இரவு 10:45 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 110 கிமீ தொலைவில் தெஹ்ரான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த முதல் நிலநடுக்கத்திற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு, நள்ளிரவில் இஸ்ரேலில் இரண்டாவது, பலவீனமான நடுக்கம் பதிவாகியுள்ளது, இந்த நில அதிர்வு நிகழ்வுகளின் தன்மை பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. இரண்டு நிகழ்வுகளின் அசாதாரண நேரமும், இரு நாடுகளுக்கிடையில் நடந்து வரும் பதட்டங்களும் சேர்ந்து பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஈரான் ரகசிய அணுசக்தி சோதனை நடத்தியதாக சந்தேகம் எழுந்தது. அதாவது ஈரான் அணு ஆயுத சோதனை செய்துள்ளது. அதனால் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இது என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஐந்து அணு ஆயுத நாடுகளின் கூட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நியூயார்க்கில் நடைபெற உள்ளது என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோ தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன. அனைத்து அணு ஆயுத நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் இந்த 5 நாடுகளும் சந்திப்பை நடத்த உள்ளன.












Click it and Unblock the Notifications