சனி அமாவாசை நாளில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் 5 கிரகங்கள்..பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: வானத்தில் சில நேரங்களில் அதிசயங்கள் நிகழும். அப்படி ஒரு அதிசயம் நாளைய தினம் சனிக்கிழமை ஜூன் 17ஆம் தேதி நிகழப்போகிறது. கிழக்கே வானத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக 5 கிரகங்கங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாக அணிவகுப்பதை பார்த்து ரசிக்கலாம்.
ராசி மண்டலத்தில் கும்ப ராசியில் சனி, மேஷ ராசியில் குரு,ராகு, ரிஷபத்தில் புதன்,சந்திரன், மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் சுக்கிரன், செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. துலாம் ராசியில் கேது கிரகம் சஞ்சரிக்கிறது. இந்த கிரகங்கள் ராசி மண்டலத்தில் வரிசையாக அமைந்திருப்பதால் வானத்தில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல தெரியும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரித்தன. சூரியன், சனி, கேது, குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்திருக்க கூடவே சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் அப்போது கணித்தனர்.ஜோதிடர்கள் சொன்னது போலவே கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகத்தை தாக்கியது. மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் சுக்கிரன், குரு, சனி, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக அணிவகுத்தன. பூமியில் இருந்து இதை வெறும் கண்களால் காண முடிந்தது. இந்த ஆண்டு இதுபோல கிரகங்களின் அணிவகுப்பு நிகழப்போகிறது. பொதுவாக இதுபோன்ற கிரகங்களின் சேர்க்கை அணிவகுப்பின் போது ஏதாவது ஒரு அதிசயம் நிகழும். சில நேரங்களில் நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி போன்ற மிகப்பெரிய விபத்துக்கள் கூட நிகழ்ந்துள்ளது.
இந்த ஆண்டு ஒரே வரிசையில் 5 கிரகங்கள் இணைந்து கடந்த மார்ச் மாத இறுதியில் ஒரே நேர் கோட்டில் தோன்றியது. இதனை பலரும் வெறும் கண்களால் பார்த்து ரசித்தனர். இதே போல நாளைய தினம் கிழக்கே வானத்தில் சனி, நெப்டியூன், வியாழன், புதன், யுரேனஸ் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக அணிவகுக்க உள்ளன.
நாளைய தினம் ஒருநாள் அதிகாலை தூக்கத்தை மிஸ் செய்யுங்கள் கிரகங்களின் அணிவகுப்பை மிஸ் செய்யாமல் பார்க்கலாம். சூரியன் உதயத்திற்கு முன்பாக ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கிழக்கே வானத்தில் கிரகங்களின் அணிவகுப்பை பார்க்கலாம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அதிகாலை நேரத்தில் பொதுவாக நாம் விடிவெள்ளி எனப்படும் சுக்கிரனை பார்க்கலாம். சில நேரங்களில் வியாழன் கிரகம் தென்படும். புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் இருப்பதால் மங்கலாகவே தென்படும். நாளைய தினம் நாம் 5 கிரகங்களின் அணிவகுப்பை காணலாம். மேக மூட்டம் இல்லாவிட்டால் நீல வானத்தில் கிரகங்கள் தெளிவாகவே தென்படும்.
சனி அமாவாசை தினமான நாளைய தினம் சனி பகவானை அதன் வளையத்தோடு காண முடியும். மேஷ ராசியில் வியாழன் கிரகமும் யுரேனஸ் எனப்படும் ராகு கிரகமும் இணைந்துள்ளன. தொலைநோக்கி இருந்தால் இந்த கிரகங்களின் அணிவகுப்பை தெளிவாக பார்க்கலாம். இந்த ஆண்டின் மிக அதிசயக்கத்தக்க மற்றுமொரு வானியல் நிகழ்வை காணத் தயாராகுங்கள் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த கிரகங்களின் சேர்க்கையால் பூமியில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications