அடுத்தடுத்த கொடூரங்கள்! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது? சொதப்பும் விஜய் - உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெற்ற தொடர் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, உளவுத்துறையின் செயல்பாடு மந்தமடைந்துள்ளதாகவும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

vijay tvk

திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவர் அடித்துக் கொலை

சென்னை திருவொற்றியூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த 18 வயது பிளஸ் 2 மாணவர் தனுஷ், அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் சக மாணவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னதாக எச்சரித்து அனுப்பிய போதிலும், வகுப்பறைக்கு வெளியே திரண்ட 12 சிறார்கள் தனுஷை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 12 சிறார்களைப் பிடித்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர் வன்முறையைக் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவர் படுகொலை

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தின் பின்புறம், மூன்றாம் ஆண்டு பயின்று வந்த 19 வயது மாணவர் கே. அமுதன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். கல்லூரி விடுதி மற்றும் முன்விரோதம் காரணமாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையே தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலின் உச்சக்கட்டமாக இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. இக்கொலை வழக்கில் மூத்த மாணவர்கள் உள்பட 14 பேரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பீளமேடு பட்டப்பகல் பயங்கரம்: வாலிபர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை

கோவை பீளமேடு உடையாம்பாளையம் பகுதியில் 25 வயதான நவீன் என்ற இளைஞர் பட்டப்பகலில் ஒரு கும்பலால் விரட்டிச் சென்று சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அப்பகுதியில் உள்ள சமூக விரோதக் கும்பலுடன் ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் பொதுவெளியில் பெரும் வன்முறையாக மாறியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறிய இக்கொலை, குடியிருப்புப் பகுதிகளில் ஆயுதக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நெல்லை வீரவநல்லூர்: 5 வயது குழந்தையுடன் தந்தை படுகொலை

தென் மாவட்டமான திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே வள்ளத்து நத்தம் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 40 வயதான காளிமுத்து என்பவர் தனது இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த மர்ம கும்பல் வாகனத்தின் மீது மோதியது. இதில் அவரது 5 வயது மகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், காளிமுத்துவை அக்கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. முன்விரோதம் காரணமாக அரங்கேறிய இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 3 முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

விளையாட்டு மைதான மோதலால் கடைக்காரர் கொலை

சென்னை புது வண்ணாரப்பேட்டை இந்திரா காந்தி நகர் அருகே, விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட வாய் தகராறு பின்னர் கோஷ்டி மோதலாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக 25 வயதான விஷ்ணு என்ற கடை உரிமையாளரை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

எழும் கண்டனங்கள்

திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அடுத்தடுத்த வன்முறைச் சம்பவங்களைக் கையில் எடுத்து விஜய் அரசை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றன. புதிய அரசின் நிர்வாக அனுபவமின்மை, உளவுத்துறையின் தோல்வி மற்றும் போலீசாரின் கண்காணிப்புக் குறைபாடே குற்றவாளிகளுக்குத் துணிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாநிலம் முழுவதும் இரவுக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத்தியில் ஆயுதப் பயன்பாடு மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்த கடுமையான சோதனைகளை முன்னெடுக்கவும் டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+