கொலை செய்ய நினைத்தவரை மாற்றிய இளையராஜா பாட்டு.. ஆட்டோ டிரைவர் சொன்னதை கேட்டு வியந்த இசைஞானி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நல்ல பாட்டு நம்முடைய மனநிலையே மாற்றிவிடும். சந்தோஷமாக இருக்கும் போது இன்னும் உற்சாகத்தை கொடுக்கும். கவலையில் இருக்கும் போது ஆறுதலாக இருக்கும். சில நேரங்களில் மனதில் இருக்கும் கோபத்தை கூட குறைத்து நம்மை அமைதிப்படுத்தும். இதற்கு உதாரணமாக இசையமைப்பாளர் இளையராஜா ராஜா தனது பேட்டியில் பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவம் இப்போது இணையத்தில் கவனம் ஈர்ந்து வருகிறது.

Ilaiyaraaja song

ஆட்டோக்காரர் சொன்ன விஷயம்

தன்னுடைய பாடலை கேட்டதால் மனைவியை கொலை செய்யும் எண்ணத்தில் இருந்து ஒருவர் மாறியதாக ஆட்டோ ஒருவர் தன்னிடம் கூறிய சம்பவத்தை இளையராஜா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதாவது, ஒரு நாள் நான் காரில் சென்று கொண்டிருந்தேன். சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பக்கத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் என்னுடைய பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ டிரைவர் திடீரென என்னை பார்த்தார். உடனே கையெடுத்து கும்பிட்டு, சார் நீங்க மட்டும் இல்லன்னா நான் என் பொண்டாட்டியை கழுத்தை நெரித்து கொலை பண்ணிருப்பேன் என்று சொன்னாரு. ஒருவருடைய கோபம் எந்த அளவிற்கு சென்றிருந்தாலும் உன்னதமான ஒரு இசை ஒரு கொலைகாரனை எப்படி மாற்றி இருக்கிறது பாருங்கள் என்று அந்த பேட்டியில் இசை ஞானி இளையராஜா பேசியிருக்கிறார்.

இளையராஜாவின் எவர்கிரீன் பாடல்கள்

இளையராஜாவின் பாடல்களை பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுறைக்கும் அதில் ஏதோ ஒரு நினைவு இருக்கும். காதல் தோல்வியில் இருப்பவர்கள், தனிமையில் வாடுபவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று துடிப்பவர்கள் என பலருக்கும் அவருடைய பாடல் ஒரு துணையாக இருந்திருக்கின்றன. சில நேரங்களில் யாரும் சொல்ல முடியாத ஆறுதலை ஒரு பாடல் நமக்காக சொல்லிவிடும். மனதில் இருக்கும் சோகத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத போது அவருடைய மெலடி பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

5 தலைமுறையின் ராஜா

அதனால் தான் இன்றைக்கும் பழைய பாடல்கள் ரேடியோவில் ஒலித்ததும், வீடியோவில் வந்தாலும் ரசிகர்கள் அவற்றை கொண்டாடுகிறார்கள். இளையராஜாவின் இசை வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், பலருடைய வாழ்க்கையில் முக்கியமான தருணங்களுடன் கலந்து இருக்கிறது. திருமணம், காதல், பிரிவு, நட்பு ,துக்கம் என ஒவ்வொரு உணர்வுக்கும் அவருடைய இசையில் ஒரு பாடல் இருக்கிறது. அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா 5 தசாப்தங்களை கடந்தும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி பலமொழி படங்களுக்கு இசையமைத்துள்ள அவர் இந்திய திரை இசையில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி இருக்கிறார். இளையராஜாவின் பாடல்களை கேட்டு தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ரசிகர்களுக்கு அவர் இப்போது சொன்ன ஆட்டோக்காரர் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சில பாடல்கள் காலத்தை கடந்து நிற்பதற்கு காரணம் அதன் இசை மட்டும் அல்ல, அதை கேட்பவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கமும் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+