சென்னை அண்ணா சாலையை அதிர வைத்த 5 பட்டதாரி இளைஞர்கள்.. பைக்கில் சிக்கிய பொட்டலங்களால் ஷாக்!
சென்னை: சென்னை அண்ணா சாலை பகுதியில் பெத்தமெட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தியதாக 4 என்ஜினீயரிங் பட்டதாரிகள், ஒரு வக்கீலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.1.67 லட்சம் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சமீப நாட்களாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவ்வப்போது பலர் கைது செய்யப்பட்டு போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மெத்தபெட்டமைன் போதைப் பொருள்
எனினும் முழுவதுமாக போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை அண்ணா சாலை பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்திய 4 என்ஜினீயரிங் பட்டதாரிகள், ஒரு வக்கீல் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-
சென்னை அண்ணா சாலை ஒயிட்ஸ் ரோடு சுமித் ரோடு சந்திப்பில் நேற்று முன் தினம் சென்னை அண்ணாசாலை போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார், அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

4 என்ஜினியர்கள் கைது
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளும் கஞ்சாவும் இருந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1.67 லட்சம் ரொக்கப்பணம், 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப்பொருளை கடத்தி வந்ததாக அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், போதைப்பொருள் கடத்தியது என்ஜினியரிங் பட்டதாரிகளான சென்னை வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 24), தரமணியை சேர்ந்த பாலச்சந்திரன் (28), கொளத்தூர் யுவராஜ் (25), அம்பத்தூர் பிரவீன் (31) என்பதும், பல்லவன் சாலையை சேர்ந்த சுஹைல் (24) என்ற வக்கீல் என்பதும் தெரியவந்தது. ஒரு புறம் வேலை பார்த்துக்கொண்டு மற்றொரு புறம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications