சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குலுங்கிய கோவை.. ஸ்டாலின் "உற்றுப்பார்த்த" அந்த விஷயம்.. செந்தில் பாலாஜிக்கு சர்ப்ரைஸ் இருக்கு போலயே

முதல்வர் ஸ்டாலின், விரைவில் செந்தில்பாலாஜிக்கு சர்ப்ரைஸ் தரப்போவதாக சொல்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினே ஆச்சரியப்படும் அளவுக்கு அசாத்திய செயலை செய்து காட்டிய செந்தில்பாலாஜிக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்கிறார்கள்.

செந்தில்பாலாஜியை பொறுத்தவரை திமுகவின் நம்பிக்கையான கை.. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர்.. நம்பகமானவர்..

கடந்த 2 வருட காலமாகவே, மாற்று கட்சியில் இருந்து முக்கியஸ்தர்களை திமுகவுக்கு இழுத்து வரும் பொறுப்பு, பெரும்பாலும் இவரிடம்தான் ஒப்படைத்து வருகிறது திமுக மேலிடம்..

ஆவணி தேய்பிறை பிரதோஷம்..பொன்னான புதன்கிழமை..லோக்சபா தேர்தலுக்கு தயாராக மு.க ஸ்டாலின் அழைப்பு ஆவணி தேய்பிறை பிரதோஷம்..பொன்னான புதன்கிழமை..லோக்சபா தேர்தலுக்கு தயாராக மு.க ஸ்டாலின் அழைப்பு

முத்திரை

முத்திரை

அந்த வகையில்தான் கொங்குவையும், கொங்குவின் சீனியர் தலைகளையும் திமுக பக்கம் கொண்டு வரும் முயற்சி இவரிடம் தரப்பட்டது.. அதை சீரும் சிறப்புமாகவே செய்து முடித்த செந்தில் பாலாஜி, தன்னுடைய வெற்றி முத்திரையை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் பதிவு செய்தார். அதேசமயம், கொங்குவில் ஓரளவு செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது தமிழக பாஜக.. திமுகவை கொங்குவில் வீழ்த்திவிடலாம் என்றும் கணக்கு போட்டது..

 கோட்டை + கொங்கு

கோட்டை + கொங்கு

அதனால்தான், கோவையின் ஒரு வார்டில் தோற்றால்கூட, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக்கூட வானதி சீனிவாசன் ஒருமுறை சவால் விட்டிருந்தார்.. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை என்பது வேறு விஷயம்.. அந்தவகையில் பாஜகவுக்கு செக் வைத்தது திமுக.. மற்றொரு புறம், அதிமுக கோட்டையாக இருந்து வந்த கொங்கு மண்டலத்தை இப்போது திமுக கோட்டையாக மாற்றிக் கொண்டிருப்பது அதிமுகவுக்கு செக் வைக்கும் வகையில் அமைந்துள்ளது.. காரணம், வெறும் 10 நிமிடத்தில் விருந்தினர் மாளிகைக்கு செல்வதற்கு பதிலாக, கிட்டத்தட்ட 1 மணி நேரம் கோவை மக்கள் மத்தியில் மெதுவாகவே முதல்வரால் சென்றடைய முடிந்ததே இதற்கு சாட்சி.

 + 50 ஆயிரம்

+ 50 ஆயிரம்

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பும், இப்படித்தான் ஸ்டாலின் கோவை வந்தபோது, மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.. அதேபோல இந்தமுறையும், சுமார் 50 ஆயிரம் பேர் கட்சியில் இணைந்துள்ளதுடன், ஆறுக்குட்டி உட்பட பெரும்பாலான புள்ளிகள் கொங்கு திமுகவுக்கு கூடுதல் பிளஸ் ஆகி உள்ளது.. கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும் ஆதரவை பெற்றுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் எழுச்சியானது, அதிமுகவின் அடிநாதத்தையே அசைத்து பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. வெட்டிவா என்றால் கட்டி வந்துவிடும் இயல்பு கொண்டவர் செந்தில் பாலாஜி என்று ஸ்டாலினே பலமுறை வெளிப்படையாக புகழ்ந்துள்ளார்.

 பூரித்த ஸ்டாலின்

பூரித்த ஸ்டாலின்

நேற்றைய தினமும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் முதல், வரவேற்புகள் வரை அனைத்தையும், பக்காவாக செய்து முடித்திருந்ததை பார்த்து, முதல்வர் வியந்து, செந்தில்பாலாஜியை தனிப்பட்ட முறையிலும் பாராட்டினாராம்.. இதில் இன்னொரு விஷயத்தையும் ஸ்டாலின் கவனித்தாராம்.. எந்த நிகழ்ச்சி என்றாலும் பிளக்ஸ் பேனர்கள், கொடிகம்பங்கள் கட்டக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த கோவை நிகழ்ச்சியிலும் அவர் உத்தரவிட்டதுபோலவே பேனர்கள் தவிர்க்கப்பட்டிருந்ததையும் கவனித்துள்ளார்.. திமுகவின் கட்டுப்பாட்டை காப்பாற்றி உள்ளதாக, கட்சி நிர்வாகிகளிடம் ஓப்பனாகவே பாராட்டினாராம்..

 குட் லிஸ்ட்

குட் லிஸ்ட்

திமுகவின் சீனியர்கள் பலரை ஒதுக்கி தள்ளிவிட்டு, செந்தில்பாலாஜிக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதாக ஏற்கனவே கட்சிக்குள் புலம்பல்கள் இருந்து வருகிறது. இதை ஸ்டாலினும் அறியவே செய்தார்.. ஆனாலும், கொடுத்த அசைன்மென்ட்டை ஒவ்வொரு முறையும் சரியாக மட்டுமல்லாமல் துரிதமாகவும் செய்து வருவதாலேயே ஸ்டாலினின் குட் லிஸ்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் பெற்று வருகிறார்.. அப்படித்தான் இந்த முறையும் முதல்வரின் பாராட்டை நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் பெற்றுள்ளதால், இதற்கான பரிசு எந்நேரமும் அமைச்சருக்கு கிடைக்கலாம் என்கிறார்கள்..!

 லோக்கல் பாலிட்டிக்ஸ்

லோக்கல் பாலிட்டிக்ஸ்

இதில் இன்னொரு லோக்கல் பாலிட்டிக்ஸ் வெடித்துள்ளதாக தெரிகிறது.. கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சிலர் செந்தில் பாலாஜி மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம்.. மொத்தம் 5 மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ள நிலையில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மட்டும் அனைத்து நல்ல பெயர்களையும் எடுப்பதாகவும், முதல்வரிடம் அவர் மட்டுமே நெருக்கமாகி வரும்நிலையில், தங்களால் முதல்வரை நெருங்கவே முடியவில்லை என்றும் புலம்புகிறார்களாம்..

சிம்மாசனம்

சிம்மாசனம்

அதிலும் அந்த 5 பேரில் 3 மாவட்ட பொறுப்பாளர்கள்தான் மிகவும் அப்செட் என்கிறார்கள்.. இந்த விஷயம் தற்போது கசிந்துள்ளதால், விரைவில் இதுவும் சரிசெய்யப்பட்டு விடும் என்றும் கோவை திமுகவினரே நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.. விரைவில் நிர்வாகிகள் நியமனம் உள்ளதாலும், ஒருசிலர் களையெடுக்கப்படும் என்று தகவல் ஒன்று வட்டமடித்து வருவதாலும், இதுபோன்ற பூசல்களுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், குறுகிய காலத்திலேயே முதல்வர் ஸ்டாலினின் மனதில், சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டார் செந்தில்பாலாஜி..!

English summary
50,000+: MK Stalin will get a surprise gift for Minister Senthil Balaji and what happened in Kongu Kovai முதல்வர் ஸ்டாலின், விரைவில் செந்தில்பாலாஜிக்கு சர்ப்பரைஸ் தரப்போவதாக சொல்கிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X