"15 தாமரைகள்".. நொறுங்கிய பாஜகவின் பிளான்கள்.. அமித்ஷாவின் கோவை திடீரென கேன்சல்.. இதுதான் காரணமா?
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோயம்புத்தூர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது
சென்னை: அமித்ஷா கோவைக்கு வருவதாக இருந்த நிலையில், திடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. என்ன காரணம்?
எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழக பாஜகவும் தன்னுடைய வியூகத்தை 6 மாதங்களுக்கு முன்பேயே வகுக்க ஆரம்பித்துவிட்டது.
அதனால்தான், அதற்கான முதல் ஆலோசனை கூட்டத்தை மதுரையில் அன்றே துவங்கினார் மாநில தலைவர் அண்ணாமலை.. அப்போது அவர் பேசியபோது, "15 இடங்களில் பாஜக வெற்றி உறுதி.. மிச்சம் 25 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது பாஜகவின் ஒரே லட்சியம்" என்றுகூறினார்.

15 தாமரைகள்
ஆலோசனை கூட்டத்திலேயே 15 இடங்கள் கன்பார்ம்டு என்று அண்ணாமலை கூறியிருந்தது, மற்ற கட்சிகளுக்குவியப்பை தந்தது... "தமிழகத்திலும் பாஜக ஆட்சி விரைரவில் மலரும்" என்று அமித்ஷா ஹைதராபாத் மாநாட்டில் சூளுரைத்ததற்கு முன்பேயே ஜரூர் வேலையில் இறங்கியது தமிழக பாஜக.. அத்துடன், பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, பாஜக தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சில அறிவுரைகளையும் தந்திருந்தது, தமிழக பாஜகவுக்கு பூஸ்ட் தந்தது போலாகிவிட்டது.

பிளான்கள்
பாஜக இந்த முறை தமிழகத்தை குறி வைத்தே தன்னுடைய தேர்தல் பிளானை நடத்தி வருகிறது.. காரணம், நம் நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது... இதில், 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது... மற்ற மாநிலங்களில் குறிப்பாக அடுத்து வரும் தேர்தல்களில் வெற்ற பெற வேண்டும் என்ற முனைப்பில்தான், ஆபரேஷன் தாமரை கையில் எடுக்கப்பட்டுள்ளது.. அந்தவகையி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த வாரம் தமிழகம் வர உள்ளதாக கடந்த சில தினங்களாகவே செய்திகள் வந்தன..

கோவை பயணம்
தமிழக பாஜகவின் சார்பில் திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனை திறந்து வைக்கவே, அமித்ஷா வரும் 29ம் தேதி ஒருநாள் பயணமாக கோவை வருகிறார் என்றும், அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலமாக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார் என்றும் கூறப்பட்டது.. ஏற்கனவே, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார்...

வீடியோ கான்பரன்ஸ்
அதைத் தொடர்ந்து, நாளை கோவையில் கட்சி அலுவலகத்தை, அமித்ஷா நேரடியாக வந்து திறந்து வைக்கவும், அங்கிருந்தபடியே 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மற்ற மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேசமயம், அமித்ஷா வருகைக்கான காரணங்கள் இவைகளாக சொல்லப்பட்டாலும், பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து, அமித்ஷா ஆலோசனை செய்ய போவதாகவும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் எப்படி என்றும் அவர்களிடம் கேட்டறிந்து செல்வார் என்றும் கணிக்கப்பட்டிருந்தது..

அமித்ஷா
ஆனால், திடீரென அமித்ஷாவின் கோவை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.. காங்கிரசில் இருந்து மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் விலகலால் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு காரணமாக, கோவை நிகழ்ச்சியை அமித்ஷா திடீரென ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டதற்கு இதற்கு இன்னொரு காரணமும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.. கடந்த முறை பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தபோது, உடனடியாக பூத் கமிட்டிகளை நியமனம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு போனதாக செய்திகள் வந்தன..

50000 பேர்
ஆனால், பாஜகவிற்கு பல பூத்களில் ஆட்களே இல்லையாம்.. போதாக்குறைக்கு டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகியது முதல், மாற்றுக்கட்சியினர் 50000 பேர் திமுகவில் இணைந்தது வரை அத்தனை தகவல்களும் டெல்லிக்கு சென்றிருந்த நிலையில், இதுவும் மேலிடத்தை கடுப்பாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.. கொங்குவை வசப்படுத்திவிட்டதாக திமுகவின் பூரிப்பு இன்னமும் அடங்காத நிலையில், அதே கோவைக்கு அமித்ஷா உடனடியாக வருவது என்பதும் நெருடலை தரும் என்பதாலேயே வருகையை அமித்ஷா ரத்து செய்திருக்கலாம் என்றும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications