பள்ளி மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய கொரோனா.. தமிழகத்தில் 511 பேருக்கு குழந்தை திருமணம்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே கொரோனோ காலக்கட்டத்தில் மாணவிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து முடித்த அதிர்ச்சி தகவல் பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனோ காலகட்டத்தில் அவ்வாறு திருமணம் முடித்து இடைநின்ற 511 மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை மாணவிகளை பள்ளியில் சேர்த்துள்ளது.
கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கையை சூறையாடியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். கொரோனோ முதல் அலையின் தாக்கம் குறைந்த பின் முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏராளமான மாணவர்களும்,மாணவிகளும் பள்ளிகளுக்கு வரவில்லை.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வாயிலாக இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களமிறங்கியது. அப்போது ஏராளமான மாணவர்கள் வேலைகளுக்கு செல்வதை கண்டறிந்து அத்தகைய மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

திருமணங்கள்
மாணவிகளை பொருத்தவரை 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி தொடங்கி 12ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் வரை பெற்றோர்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். அந்த வகையில் 511 மாணவிகளுக்கு திருமணம் முடிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து அந்த மாணவிகளை அரசு அதிகாரிகளின் உதவியோடு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருமணமான மாணவிகள்
11ம் வகுப்பு மாணவிகள் 417 பேரும், 12ம் வகுப்பு மாணவிகள் 2 பேரும் , 9ம் வகுப்பு மாணவிகள் 37 பேரும் , 10ம் வகுப்பு மாணவிகள் 45 பேரும் , 8ம் வகுப்பு மாணவிகள் 10பேரும் என 511 மாணவிகளுக்கு பெற்றோர்கள் நடத்தி முடித்துள்ளனர். இந்த மாணவிகள் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கையால் மீண்டும். பள்ளிகளில் சேர்க்கப்பட்டு அவர்களின் கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கால திருமணங்கள்
தமிழகத்தில் நெடு நாட்களாகவே குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக அதிக அளவு நடைபெற்றுவந்த குழந்தை திருமணங்கள் குறைந்திருந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஆய்வில் எட்டாம் வகுப்பு முதலே மாணவிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக கொரோனோ காலக்கட்டத்தில் இத்தகைய குழந்தை திருமணங்கள் அதிகளவு நடந்தேறியுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கிராமங்களில் அதிகம்
பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போக்கு நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் அதிக அளவு நெடுங்காலமாகவே நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வந்தாலும் குழந்தை திருமணங்களை முழுவதுமாக தடுக்க இயலாத ஒரு நிலை இருந்து வருகிறது.

குழந்தை திருமணங்களுக்குக் காரணம்
வறுமையே இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு முக்கியமான காரணியாக கருதப்படுவது. பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை விரைவாக நடத்தி முடித்து விட்டால் வறுமையின் பிடியில் இருந்து தப்பலாம் என்கிற எண்ணமே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர். இதுபோன்ற குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் மாணவிகளை பள்ளிகளுக்கு அனுப்பவும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications