வைகை, மலைக்கோட்டை உள்பட பல ரயில்கள் நிற்க போகும் புதிய இடங்கள்.. தமிழ்நாட்டிற்கே இனிப்பான விஷயம்
சென்னை: தமிழ்நாட்டில் ஓடும் மதுரை வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ஆந்திராவின் புட்டபர்த்தி செல்லும் ரயில், புதுச்சேரி ஹவுரா எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட ஏராளமான ரயில்களில் அறிவிக்கப்பட்ட புதிய நிறுத்தங்களில் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று மேஜர் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. அது என்னவென்றால் சோதனை அடிப்படையில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய நிலைய நிறுத்தங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து ரயில்கள் நின்று செல்லும் என்று கூறியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வைகை, மலைக்கோட்டை , குருவாயூர் உள்ளிட்ட 53 விரைவு ரயில்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கூடுதல் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது இதுபற்றி புதிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 53 விரைவு ரயில்கள் கடந்த செப்டம்பர் முதல் 6 மாதங்களுக்கு கூடுதல் ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புகள் அளித்துள்ளது.
தினமும் மதுரை சென்னை இடையே செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மறு அறிவிப்பு வரும் வரை இரு மார்க்கத்திலும் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். இதேபோல் திருச்சிக்கு தினமும் செல்லும் ராக்ஃபோர்ட் கல்லக்குடி பழங்காநத்தத்திலும், மன்னை விரைவு ரயில் கொரடாச்சேரியிலும், உழவன் விரைவு ரயில் கடலூர் துறைமுகத்திலும், நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் சாத்தூரிலும் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.
Experimental stoppage provided at the stations for the following trains will continue until further advice
— Southern Railway (@GMSRailway) February 28, 2024
Passengers are requested to take note on this and plan your #Travel #SouthernRailway #RailwayAlerts #RailwayUpdates pic.twitter.com/klrfLfAlL7
இதேபோல் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மறு உத்தரவு வரை ஆரல்வாய்மொழியில் நின்று செல்லும்.
தொடர்ந்து நின்று செல்லும். சென்னையில் இருந்து சென்னை செல்லும் பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஹவுரா புதுச்சேரி வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும். சாம்ராஜ் நகர் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஆம்பூரில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.
மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் புகலூரிலும். மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கொடைரோடு ரயில் நிலையத்திலும், புனலூர் மதுரை இடையே செல்லும் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், மதுரை புனலூர் இடையே செல்லும் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். மும்பை நாகர்கோவில் ரயில் நாங்குநேரியிலும் நின்று செல்லும்.. திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் போளூர் திருகோவிலூரில் நின்று செல்லும். புருல்லா விழுப்புரம் எக்ஸ்பிரஸ் திருக்கோவிலூர் ரயில் நிலையத்திலும், ராமேஸ்வரம் அயோத்தியா சேது ரயில் காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திலும் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications