சென்னையில் 55 மின்சார ரயில்கள் ரத்து.. ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை இயங்காது.. நோட் பண்ணுங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் 44 சிறப்பு மின்சார ரயில்களும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

சென்னை சிட்டி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்களால் பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வருகின்றன.

chennai electric train indian railway

இதனால் மின்சார ரயில்களுக்கு சென்னையில் தனி மவுசு உள்ளது. குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரம் யார்டு ரயில்வே ஸ்டேஷனின் 2ம் கட்ட புனரமைப்பு பணியுடன் சேர்ந்து தாம்பரம் யார்டுவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு கருதி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியின் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் )14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

* அதன்படி ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே தினமும் காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* மறுமார்க்கமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு தினமும் காலை 11.00, 11.30 மதியம் 12.00, இரவு 11.00 உள்ளிட்ட நேரங்களில் புறப்பட்டு செல்லும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

* அதேபோல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தினமும் காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ஜுலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளது.

* மறுமாரக்கமாக சென்னை தாம்பரம் - கடற்கரை நோக்கி காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும் சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 உள்ளிட்ட நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும் மேற்கூறிய தினங்களில் இயங்காது.

* மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 உள்ளிட்ட நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

* இதுதவிர செங்கல்பட்டில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் மின்சார ரயிலும், காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் மேற்கூறிய தினங்களில் இயங்காது.

சிறப்பு ரயில்கள்: மேலும் இந்த ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரை - பல்லாவரம், பல்லாவரம் - சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே இயங்க உள்ளது.

* அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்படும் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரையை சென்றடைய உள்ளது.

* அதேபோல் கூடுவாஞ்சேரியிலிருந்து தினமும் காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 உள்ளிட்ட நேரங்களில் சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல உள்ளது. மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து தினமும் காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+