சென்னையில் மேலும் 55 பேருக்கு கொரோனா- மொத்தம் 358 பேருக்கு பாதிப்பு - மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்
சென்னை: சென்னையில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இன்றும் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 55 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இதனையடுத்து சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்ததாக கோவையில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அங்கு மொத்தம் 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரங்கள்:
சென்னை- 358; கோயம்புத்தூர்-134; திருப்பூர் 109; திண்டுக்கல் 76; ஈரோடு 70
திருநெல்வேலி 62; செங்கல்பட்டு 56; நாமக்கல் 51; திருச்சி 50
திருவள்ளூர் 48; மதுரை 46 ; தஞ்சாவூர் 49; நாகப்பட்டினம் 43; தேனி 43; கரூர் 42
விழுப்புரம் 40; ராணிப்பேட்டை 39; தென்காசி 31; திருவாரூர் 28; தூத்துக்குடி 27; கடலூர் 26; சேலம் 24; வேலூர் 22 ;
விருதுநகர் 19 ; திருப்பத்தூர் 17 கன்னியாகுமரி 16; சிவகங்கை 12; திருவண்ணாமலை 12; ராமநாதபுரம் 11;
காஞ்சிபுரம் 10; நீலகிரி 9; பெரம்பலூர் 5; கள்ளக்குறிச்சி 5; அரியலூர் 4; புதுக்கோட்டை 1












Click it and Unblock the Notifications