4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 4-ஆவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று எண்ணிக்கையைவிட 2 மட்டுமே குறைந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு குறித்த செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டது.

இதில் இன்றைய தினம் மேலும் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய பாதிப்பு

இன்றைய பாதிப்பு

கடந்த வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000-த்தை தாண்டியது. நேற்று முன் தினம் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 3-ஆவது நாளான நேற்றும் 6 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 6,988 பேருக்கு ஆகும். இன்றைய நிலவரபடி தமிழகத்தில் மொத்தம் 6,911 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

பரிசோதனை

பரிசோதனை

சர்வதேச விமானம், உள்நாட்டு விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வந்த 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆக மொத்தம் 6,986 பேராகும். இன்று 64, 129 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அது போல் இதுவரை 23,51,463 பேருக்கு சளி மாதிரி எடுத்து கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆண்கள், பெண்கள் எத்தனை

ஆண்கள், பெண்கள் எத்தனை

இன்று மட்டும் 62,305 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதுவரை 22,62,738 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பில் 4,215 ஆண்களுக்கும் 2,771 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 1,28,768 ஆண்களும், 83,932 பெண்களும் 23 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இன்றைய தினம் 5,471 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றுள்ளார்கள். இதுவரை 1,56,526 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 85 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,494 பேராகும். சென்னையில் இன்று 1155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+