6 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை.. ஆனால் புயல் உருவாகுமா? சென்னை வானிலை மையம் விளக்கம்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் இந்திய பெருங்கடலில் புயல் சின்னம் எதுவும் ஏற்படாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மக்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் இந்திய பெருங்கடலில் புயல் சின்னம் எதுவும் ஏற்படாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடமால் மழை பெய்துள்ளது. தமிழகம் முழுக்க இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    அதிகமாக ஏங்கு

    அதிகமாக ஏங்கு

    வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இது தொடர்பாக அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிகபட்சமாக சாத்தான் குளத்தில் 19 செமீ மழை பெய்துள்ளது. கடலூர், தூத்துக்குடி, குறிஞ்சிப்பாடியில் 17 செமீ மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 15 செமீ மற்றும் வேதாரண்யத்தில் 14 செமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் 14 இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழையும், 53 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.

    இரண்டு நாட்கள்

    இரண்டு நாட்கள்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். சென்னையிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி உள்ளது .

    அதிக காற்று

    அதிக காற்று

    லட்சத்தீவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியில் சுறாவளிக்காற்று வீச வாய்ப்பு. இதனால் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 6 மாவட்டங்கள் மழையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும்.

    10 மாவட்டங்கள்

    10 மாவட்டங்கள்

    சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல்
    உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் குமாரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    புயல் சின்ன

    புயல் சின்ன

    ஆனால் இதனால் புயல் சின்னம் உருவாகாது. இதனால் புயல் ஏற்பட வாய்ப்பு கிடையாது.தமிழகம், புதுவையில் மேலடுக்கு சுழற்சியாலும் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது, என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவி அரசன் பேட்டி அளித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+