பேரு மட்டும் “பிரஸ்டீஜ்”.. நடந்தது பாலியல் தொழில்.. சென்னை ஸ்பாவில் இருந்து 6 இளம்பெண்கள் மீட்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போரூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்பாவில் இருந்து 6 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர், ஸ்பா என்ற பெயர்களில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி இயங்கி வரும் ஸ்பாக்களை கண்டறிந்து, காவல்துறையினர் சீல் வைத்து மூடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Chennai Spa Crime

முறையான உரிமங்கள் பெறாமல் ஸ்பாக்கள் நடத்தி வருபவர்கள் அதில் மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடத்தி வருவதாகவும், தொடர்ந்து புகார்கள் வருவதன் அடிப்படையில் போலீசார் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள பிரஸ்டீஜ் என்ற ஸ்பாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்பாவுக்கு சென்ற போலீசார் அங்கிருந்த 6 இளம்பெண்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 6 பெண்களும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்பா என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+