சென்னையில் டிராபிக் பிரச்சினைக்கு வருது தீர்வு.. 6 சாலைகளை விரிவு செய்ய பிளான்! முக்கியமான இடமாச்சே
சென்னை: சென்னையில் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 6 முக்கிய சாலைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நகரின் முக்கியமான சாலைகளில் பீக் நேரத்தில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால், காலை நேரத்தில் அலுவலகம் செல்வோரும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

சென்னையில் மக்களிடையே வாகன பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேம்பாலங்கள் கட்டுவது.. சாலைகளை அகலப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தான், சென்னை தலைமை செயலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, சென்னை மாநகராட்சி சாலைகள், மேம்பாலங்கள் மேம்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னையிம் மிக முக்கியமான சாலைகளை விரிவுப்படுத்துவது குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிராராம்.
* காமராஜர் சாலையில் இருந்து வாலாஜா சாலை போக்குவரத்து சந்திப்பு முதல் கலங்கரை விளக்கம் வரை (3 கி.மீ)
* புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச்., சாலையில் இருந்து பெரியார் சாலை வரை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.(2கி.மீ),
* சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் முதல் அண்ணா சாலை சந்திப்பு வரை (2 கி.மீ)

* காந்தி மண்டபம் சாலையில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை (200 மீ).
* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், சென்னை சிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரை (800 மீ).
* கிரீன்வேஸ் சாலையில், போர்சோர் எஸ்டேட் முதல் திரு.வி.க., பாலம் வரை உள்ள பேருந்து வழித்தட சாலைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். சாத்தியக்கூறு ஆய்வுகளுக்கு பிறகு.. இந்த சாலைகளை விரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வாய்புள்ளதாக தெரிகிறது.
எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால், சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் திட்டமாக இது இருக்கும். ஏனெனில் மேற்கூறிய 6 சாலைகளும் சென்னையின் மிக முக்கியமான சாலைகள் ஆகும். இவற்றை விரிவுபடுத்தும் பட்சத்தில் நெரிசல் பெருமளவு குறையும்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications