சுதந்திர தினம்: அஸ்ரா கர்க் உள்பட 6 போலீஸ்காரர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிப்பு
சென்னை: வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்.
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், மாநிலங்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்றி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறகு உரை நிகழ்த்துவார்.

முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தயாராகி வருகிறது. சுதந்திர தினத்தன்று காவல் துறையினருக்கு பதக்கங்களும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் அமைச்சரின் காவல் பதக்கம் காவல் துறை உயர் அதிகாரிகள் 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை எஸ்.பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் ஆர்.குமார் உள்பட 6 பேருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 போலீசருக்கும் முதல் அமைச்சர் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications